பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் 'ஜவான்' . இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அவர் மறுத்ததை அடுத்து நடிகர் அல்லு அர்ஜுனிடம் இயக்குனர் அட்லீ பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில் அவரும் மறுத்துவிட்டார்.
தற்போது இயக்குனர் அட்லீ, நடிகர் ராம்சரணை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆர்ஆர்ஆர் படத்திற்காக ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளார் ராம் சரண். அதனால் இப்படத்தில் நடிப்பது குறித்து எந்த பதிலும் இன்னும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.