ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கும் ஹாலிவுட் வெப் சீரிசான 'சீட்டடெல்' டிரைய்லர் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. ஹாலிவுட் சினிமா தரத்திற்கு அது இருப்பதாக பாராட்டுகளையும் குவித்து வருகிறது. 6 எபிசோட்கள் கொண்ட இந்த சீரிசின் முதல் இரண்டு எபிசோட்கள் வருகிற ஏப்ரல் 28ம் தேதி ஓடிடி.,யில் வெளியாகிறது. அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஒவ்வொரு எபிசோட்கள் வெளியாகிறது.
இந்த வெப் சீரிசை ருஸ்ஸோ பிரதர்ஸ் மற்றும் ஷோரன்னராக டேவிட் வெயில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பிரியங்கா சோப்ராவுடன் ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் நடித்துள்ளனர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.
இதன் கதை இதுதான்: சீட்டடெல் என்பது சுதந்திரமான ஒரு உளவு நிறுவனம், எந்த நாடும் அவர்களை பணியமர்த்தலாம். சக்தி வாய்ந்த இந்த அமைப்பை மாண்டிகோர் என்ற தாதாக்களின் கூட்டமைப்பு 8 ஆண்டுகளுக்கு முன்பு அழித்து விடுகிறது. இதில் பிரியங்கா சோப்ராவும், ரிச்சர்ட் மேடனும் மட்டும் தப்பிக்கிறார்கள். ஆனால் இருவருக்குமே கடந்த காலம் மறந்து விடுகிறது. இதனால் அவர்கள் சாதாரண மனிதர்களாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்று தெரிந்த பிறகு தங்கள் அமைப்பை அழித்தவர்களை எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதுதான் இதன் கதை.