டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பிரபல தெலுங்கு படத் தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ், இதிகாசமான 'மகாபாரதம்' காவியத்தை ஓடிடி தளத்திற்காக உருவாக்க உள்ளதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறிவித்தது. ஆனால், அதன் பிறகு அது பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் அதிகமாக வரவில்லை.
இதனிடையே, பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆமீர்கான் ஹைதராபாத்திற்குச் சென்று கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. அல்லு அர்ஜுன் குடும்பத்தினருக்குச் சொந்தமான நிறுவனம்தான் இந்த நிறுவனம். ஆமிர்கானை ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து அல்லு அர்ஜுன் வீடு இருக்கும் ஜுபிலி ஹில்ஸ் பகுதிக்கு அல்லு அர்ஜுனின் கார் மூலம்தான் அழைத்து வந்துள்ளார்கள்.
ஆமீர்கான் கடைசியாக நடித்து வெளிவந்த 'லால் சிங் சத்தா' படம் படுதோல்வி அடைந்தது. அதற்குப் பிறகு அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 'மகாபாரதம்' ஓடிடிக்கென பிரத்யேகமாக பிரம்மாண்டமாக உருவாகும் எனத் தெரிகிறது.