ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் |

கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட பாலிவுட் நடிகர் அனுபம் கெர் அவ்வப்போது தென்னிந்திய மொழி படங்களிலும் செலெக்ட்டிவான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது தனது 68வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்திருக்கும் அனுபவம் கெர் கடந்த சில பிறந்த நாட்களில் ஒவ்வொரு விஷயமாக சவால் விட்டு அதை நிறைவேற்றிக் காட்டி வருகிறார்.
கடந்த வருடம் மேலாடை இன்றி தனது கட்டுமஸ்தான உடலை ரசிகர்களிடம் காட்டி அவர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்த வருடத்தில் தண்ணீர் மீது தனக்கு இருந்த பயத்தை போக்கும் விதமாக பத்து நாளைக்கு முன்பிருந்தே நீச்சல் கற்றுக்கொண்டு தனது பிறந்த நாளின்போது நீச்சல் குளத்தில் யாருடைய உதவியும் இன்றி, தான் நீச்சல் அடிக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார் அனுபம் கெர்.
இது குறித்து மேலும் அவர் வீடியோ ஒன்றில் பேசும்போது, “வயதாகிவிட்டது என்று யாரையும் ஏளனம் செய்ய வேண்டாம்.. வயதானாலும் உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.. பயத்தை எப்படி போக்கி, நினைத்த விஷயத்தை சாதிக்க வேண்டும் என்பதற்கு வயதானவர்களுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் ஒரு உற்சாக தூண்டுதலாக இருக்கும் விதமாக எனது பிறந்த நாட்களில் ஒவ்வொரு விஷயமாக செய்து காட்டி வருகிறேன். அந்த வகையில் இந்த 68 வயதில் முதல் முறையாக தண்ணீர் மீதிருந்த பயத்தை போக்கி நீச்சல் கற்றுக் கொண்டுள்ளேன்” என்று கூறியுள்ளார் அனுபம் கெர்.