திரு மாணிக்கம் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த் | அப்பாவுடன் மோதும் அதிதி ஷங்கர்! | விடாமுயற்சி பின்வாங்கியதால் பொங்கல் ரேஸில் குட் பேட் அக்லி களம் இறங்குகிறதா? | சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் லீக் ஆனது! | 200 கோடி லாபத்தை நெருங்கும் 'புஷ்பா 2' | சிறு பட்ஜெட் படங்கள் தான் வாழ்வியலை பேசும்: சங்ககிரி ராஜ்குமார் சொல்கிறார் | தமிழ் படத்தில் லண்டன் நடிகை | மீண்டும் வருகிறார் 'ஆரண்ய காண்டம்' யாஸ்மின் பொன்னப்பா | வணங்கானில் உண்மை சம்பவம்: பாலா | பிளாஷ்பேக்: இரண்டு ஹாலிவுட் படங்களை காப்பியடித்து எடுக்கப்பட்ட 'ராஜபார்வை' |
கடந்த சில ஆண்டுகளாகவே தென்னிந்தியாவில் உருவாகி, ஹிந்தியில் வெளியாகும் படங்கள் அங்குள்ள முன்னணி பாலிவுட் நடிகர்களின் படங்களை விட அதிக அளவில் வசூலித்து வருகின்றன. அந்தவகையில் கேஜிஎப் 2, பாகுபலி 2 ஆகிய படங்கள் ஹிந்தியில் மிகப்பெரிய வசூலை பெற்றன. குறிப்பாக இதுவரை பாலிவுட்டில் வெளியான படங்களில் பாகுபலி 2 படம் 510 கோடி வசூலித்து முதல் இடத்தை தக்க வைத்திருந்தது.
அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கேஜிஎப் 2 மற்றும் ஆமிர்கானின் தங்கல் ஆகியவை இருந்தன. பாகுபலி 2வின் இந்த சாதனை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் யாராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் தற்போது இந்தியில் மட்டும் 526 கோடி வசூலித்து பாகுபலி 2 வசூல் சாதனையை ஓவர்டேக் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பதான் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் சோசியல் மீடியாவில் கூறும்போது, “எனக்கு இது மிகவும் பெருமையான தருணம்.. இந்த படத்தை உற்சாகப்படுத்திய அனைத்து பார்வையாளர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.