இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஷாருக்கான் நடித்த 'பதான்' படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம், சிறப்பு வேடத்தில் சல்மான் கான் ஆகியோர் நடித்திருந்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், திரையரங்குகளில் 50 நாட்களை நெருங்கிவிட்ட பதான், ஓடிடியில் வெளியாகிறது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் 22ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் ஷாருக்கான், பதான் என்ற சீக்ரெட் ஏஜென்டாக நடித்துள்ளார். தீவிரவாதியாக மாறிய முன்னாள் இந்திய ராணுவ வீரர் ஜான் ஆப்ரஹாமிடமிருந்து, இந்தியாவை எப்படி ஷாருக்கான் காப்பாற்றுகிறார் என்பதே கதை. தீபிகா படுகோனின் கவர்ச்சியும், ஆக்ஷனும் படத்தில் பெரிதும் பேசப்பட்டவை, சல்மானும், ஷாருக்கானும் இணைந்து நடித்த காட்சிகள் படத்திற்கு பெரிய கமர்ஷியல் பேக்கேஜாக அமைந்தது.