சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

'தி நைட் மேனேஜர்' என்ற ஹாலிவுட் வெப் தொடர் உலக புகழ்பெற்றது. 6 எபிசோட்கள் கொண்ட இந்த தொடர் 2016ம் ஆண்டில் வெளியானது. இந்த தொடர் தற்போது இதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. பணம் கடத்தல் தொடர்பான பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் தொடர்.
இதில் 'பொன்னியின் செல்வன்' புகழ் நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட் நட்சத்திரங்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 17ல் வெளியாகிறது.
தமிழ் இசையமைப்பாளரான சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார். இந்தியில் தயாராகி உள்ள தொடர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழியிலும் வெளியாகிறது.