மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
காஜல் அகர்வால்-இலியானா என்ற இரு அழகுப் புயல்களும், பாலிவுட்டை மையம் கொண்டிருப்பதால், அங்கு கடும் சூறாவளிக் காற்று, சுற்றிச் சுழன்று அடிக்கிறது. இருவருக்கும் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில், காஜல் அகர்வால் அளித்த ஒரு பேட்டியில், "ஒரு படம் வெளியானதும், அதில் நடித்த நடிகைகளின் பணி முடிந்து விடுவது இல்லை. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டும். ஆனால், இப்போதெல்லாம் சில நடிகைகள், இதுபோன்ற விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை என்றாராம். இவர், இலியானாவை மனதில் வைத்துத் தான், இப்படி பேசியுள்ளார், என, சில குசும்பர்கள், கொளுத்திப் போட, காஜல் மீது, இலியானா, கடும் கோபத்தில் இருக்கிறாராம். இரண்டு பேருமே, பாலிவுட்டில், ஒரு சில படங்களில் தான் நடித்துள்ளனர். அதற்குள், இருவருக்கும் இடையே, முட்டல், மோதல் துவங்கியுள்ளது, பாலிவுட்டை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.