மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
"கஜினி படத்தின் இந்தி ரீ-மேக் மூலம், பாலிவுட்டுக்கு அறிமுகமான, அசினுக்கு, ஆரம்பத்தில் பாராட்டுகள் குவிந்தன. ஆனாலும், பிசியான நடிகைகளின் பட்டியலில், அவர் இடம் பெற முடியவில்லை. "போல்பச்சன், கில்லாடி போன்ற படங்களில் நடித்தாலும், அந்த படங்கள், சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி பெறவில்லை. இது ஒரு புறம் இருக்க," பெரிய நடிகர்கள், பெரிய தயாரிப்பாளர்களின் படங்களில் மட்டுமே நடிக்க, அசின் ஆர்வம் காட்டுகிறார் என, பாலிவுட்டில் செய்திகள் வெளியாக, அதை மறுத்துள்ளார், அசின். "கஜினிக்கு பின், அதிக படங்களில் நடிக்கவில்லை என்பது உண்மை தான். அதிக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எனக்கு வந்தன. ஆனாலும், அவற்றில் எனக்கு முக்கியத்துவம் இல்லாத கேரக்டர்களாக இருந்ததால், நடிக்கவில்லை. புதிதாக அறிமுகமாகும் நடிகைகள், நிலையான இடத்தை பிடிப்பதற்காக, பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பது அவசியமான ஒன்று. அதனால் தான், பெரிய நடிகர்களின் படத்தில் நடிக்க, ஆர்வம் காட்டுகிறேன். மற்றபடி, இளம் தலைமுறை நடிகர்களின் படங்களிலும், நடிக்க ஆர்வமாகவே இருக்கிறேன் என்கிறார், அசின்.