'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
பாலிவுட் கதாநாயகிகள் ஒரு பக்கம் முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கும் வேளையில், நடிகை கங்கனா ரனாவத் வரலாற்று கதைகளிலும் வித்தியாசமான சமூக கதைகள் மற்றும் கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இன்னும் ஒருபடி மேலே போய் டைரக்ஷனிலும் இறங்கி மணிகர்ணிகா என்கிற படத்தை இயக்கி வெற்றியும் பெற்றார்.
தற்போது மறைந்த பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு வரும் எமர்ஜென்சி என்கிற படத்தில் இந்திரா வேடத்தில் நடிப்பதுடன் இந்த படத்தையும் அவரே இயக்கி வருகிறார். இதில் அனுபம் கெர், மஹிமா சவுத்ரி, மிலிந்த் சோமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கங்கனாவின் தலைவி படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசை அமைத்து வருகிறார். இந்தப்படத்தில் தற்போது ஒரு பாடல் காட்சி படமாகி வருகிறது.
இதுகுறித்து தற்போது கங்கனா கூறும்போது, “இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் அருமையான பாடல்களை தந்துள்ளார். இந்த படத்தில் 5 பாடல்கள் இருக்கின்றது. ஆனால் நிறைய பேர் இந்த எமர்ஜென்சி படத்திற்கு பாடல்களே தேவை இல்லை என்று கூறி வருகிறார்கள். அது ஏன் என்றுதான் எனக்கு புரியவில்லை. நான் பாடல்களை ரொம்பவே விரும்புபவள். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய படத்திற்கு பத்து நிமிட நீளமான பாடலுடன் கூடிய இன்டர்வல் பிளாக் இருந்தால் அதிகம் சந்தோஷப்படுவேன் என்று கூறியுள்ளார் கங்கனா.