விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
கைதி, மாஸ்டர், குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது தெலுங்கில் பவன் கல்யாணுடன் இணைந்து ஓஜி என்ற படத்தில் நடித்துள்ளார். இது குறித்து தனது இணைய பக்கத்தில் அவர் ஒரு நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஓஜி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சுஜித் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற எனது கனவை இந்த படத்தில் நிறைவேற்றி உள்ளார்கள்.
பவன் கல்யாண் தெய்வீகமான மனிதர். அவரது எளிமை அன்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவருடன் இணைந்து ஓஜி படத்தில் நடித்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். அவருடன் நடித்து முடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. என்றாலும் இனிமேலும் தினமும் படப்பிடிப்புக்கு செல்ல முடியாதே என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு பவன் கல்யாணுடன் இணைந்து நடித்தது ஒரு மறக்க முடியாத பயணம் என்று நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டிருக்கிறார் அர்ஜுன் தாஸ்.