விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
வினோத் இயக்கத்தில் விஜய் அவரது 69வது படமான 'ஜனநாயகன்' படத்தை கடைசி படமாக அறிவித்து நடித்து வருகிறார். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். அனிரூத் இசையமைக்கிறார். இதை பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இப்படம் அடுத்தாண்டு, 2026 ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது. ஏற்கனவே இத்திரைப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்லைட் பிஸ்னஸ் முடிவடைந்தது. தற்போது தமிழ்நாடு திரையரங்கு உரிமையை கைப்பற்ற போட்டி கடுமையாகியுள்ளது .ஏற்கனவே இந்த போட்டியில் இருந்த ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியேறினார். இப்போது தயாரிப்பாளர்கள் தாணு மற்றும் லலித் இருவரிடையே போட்டி நிலவி வருகிறதாம். தமிழக தியேட்டர் உரிமையை கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சுமார் ரூ.100 கோடி வரை பேசி வருவதாகவும் சொல்கிறார்கள். இருவருமே விஜய்யை வைத்து படம் தயாரித்தவர்கள் என்பதால் யாருக்கு இந்த படம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.