பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன், நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், அன்பு இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛படை தலைவன்'. யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ஏற்கனவே இரண்டு முறை இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகமெங்கும் அடுத்தவாரம், ஜூன் 13ல் 500 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ், எல்.கே.சுதீஷ் கைப்பற்றி உள்ளார்.