சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியில் சிறந்த இயக்குனராக மாதவன் தேர்வு | சீதை வேடத்தில் நடிக்க அசைவம் தவிர்த்தேன்: கீர்த்தி சனோன் | ஓடிடி வருகையை அன்றே அறிந்தவன் நான்: கமல்ஹாசன் பெருமை | பார்லி., புதிய கட்டடம்! வீடியோ வெளியிட்ட ஷாருக்கானுக்கு மோடி கொடுத்த பதில்! | போலி செய்தியை பரப்புபவர்கள் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள்! இயக்குனர் உதயநிதி | நினைத்தாலே இனிக்கும் சீரியலில் என்ட்ரியாகும் பிக்பாஸ் தாமரை செல்வி! | நான் கொஞ்சம் 'ரக்கட்': பாம்புவுடன் கொஞ்சி விளையாடும் பார்வதி! | என்.டி.ராமா ராவ் நூற்றாண்டு பிறந்தநாள் | நடிகர் கமல்ஹாசனுக்கு ‛வாழ்நாள் சாதனையாளர்' விருது : ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார் | அஞ்சலியின் 50வது படம் 'ஈகை': பர்ஸ்ட் லுக் வெளியீடு |
பாலிவுட்டில் எழுபதுகளில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை ரீனா ராய். சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் எப்படி காட்சியளித்தாரோ கிட்டத்தட்ட அதேபோன்ற தோற்றத்தில் தான் நடிகை சோனாக்சி சின்ஹாவும் இருக்கிறார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ரீனா ராய் அவ்வளவாக வெளியில் பேசப்படவில்லை. ஆனால் நடிகை சோனாக்சி சின்ஹா நடிக்க வந்த பிறகு இவர்களது உருவ ஒற்றுமை குறித்து அவ்வப்போது பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள ரீனா ராய் சோனாக்சியும் தன்னைப்போல இருப்பது பற்றி தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இது ஒரு கோ இன்சிடென்ட் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் ரீனா ராயை வைத்து படங்களை தயாரித்துள்ள சீனியர் தயாரிப்பாளர் ஒருவர் இன்னொரு ஆச்சரியமான தகவல் ஒன்றையும் கூறியுள்ளார்.
அதாவது பல வருடங்களுக்கு முன்பு சோனாக்சியின் தந்தை சத்ருகன் சின்ஹா, ரீனா ராய் ஆகியோர் இணைந்து நடித்தனர். அந்த சமயத்தில் சத்ருகன் சின்ஹா மீது காதலில் விழுந்தார் ரீனா ராய். அப்போது ஹத்கடி என்கிற படத்தில் சத்ருகன் சின்ஹா, சஞ்சீவ்குமார் ஆகியோருடன் சேர்த்து ரீனா ராயும் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்ய சென்றார் அந்த தயாரிப்பாளர். அப்போது சத்ருகன் சின்ஹா தனது காதலை ஏற்றுக்கொண்டால்தான் இந்த படத்தில் தான் நடிப்பேன் என்றும் அப்படி இல்லை என்றால் எட்டு நாட்களுக்குள் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொள்வேன் என்றும் கண்ணீருடன் ஒரு நிபந்தனை விதித்தாராம் ரீனா ராய்.
ஆனால் அப்போது சத்ருகன் சின்கா ஏற்கனவே திருமணமாகி இருந்தார். ரீனா ராயின் இந்த காதலையும் அவரது கோரிக்கையையும் கேட்டு சத்ருகன் சின்ஹாவும் கண்ணீர் விட்டாரே தவிர அவரால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அதன்பிறகு மோசின் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டு பாகிஸ்தானில் செட்டிலாகிவிட்டார் ரீனா ராய். ஆனால் சத்ருகன் சின்ஹாவின் மனைவி மூலம் பிறந்த குழந்தையான சோனாக்சி, ரீனா ராய் உருவத்திலேயே அச்சுஅசலாக இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது இன்று தனது வியப்பை வெளிப்படுத்தி உள்ளார் அந்த தயாரிப்பாளர்.