ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
வடக்கு டில்லியில் உள்ள கஞ்சவாலா பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய போதை ஆசாமிகள் ஓட்டி வந்த காரில் மோதி 20 வயது அஞ்சலி சிங் பலியானார். இந்த விபத்து கொடூர விபத்தாக மாறியது. மோதிய வேகத்தில் காரின் அடியில் சிக்கிய அஞ்சலி தேவியை 16 கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்றிருக்கிறார்கள். உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார் அஞ்சலி சிங். சம்பந்தப்பட்ட வாலிபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த கொடூர விபத்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அஞ்சலியின் வருமானத்தை நம்பியே அவரது குடும்பம் இருந்திருக்கிறது. இப்போது அவரது குடும்பம் நிர்கதியாகி உள்ளது. இந்த நிலையில் அஞ்சலி சிங் பற்றி கேள்விப்பட்ட ஷாருக்கான் அவரது குடும்பத்திற்கு கணிசமான நிதி உதவி அளித்துள்ளார். ஷாருக்கான் தனது தந்தையின் பெயரில் நடத்தி வரும் மீர் பவுண்டேஷன் மூலம் இந்த நிதியை வழங்கி உள்ளார். எவ்வளவு நிதி என்பதை அவர் அறிவிக்கவில்லை. ஷாருக்கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.