த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் |
ரன்வீர் சிங் நடித்து வரும் புதிய படம் சர்க்கஸ். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்குலின் பெர்னாண்டஸ், வருண் சர்மா, சஞ்சய் மிஸ்ரா, முகேஷ் திவாரி, முரளி சர்மா உள்பட பலர் நடிக்கிறார்கள். ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அவரே தயாரித்தும் இருக்கிறார்.
இந்த படத்தில் இடம்பெறும் 'கரன் லகா ரேஞ்க் என்ற பாடலுக்கு கணவர் ரன்வீர் சிங்குடன் இணைந்து ஆடியிருக்கிறார் தீபிகா படுகோனே. புஷ்பா படத்தில் இடம்பெற்ற "ஊ சொல்றியா மாமா..." பாணியில் இந்த பாடல் படமாகி உள்ளது. அந்த பாடலுக்கு இசை அமைத்த தேவி ஸ்ரீபிரசாத் இந்த பாடலுக்கும் இசை அமைத்துள்ளார்.
இந்த பாடலின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தீபிகா தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதுதவிர ஹிருத்திக் ரோஷனுடன் பைட்டர், தி இன்டர்ன் ரீமேக், பிரபாஸுடன் நடிக்கும் ப்ராஜெக்ட் கே ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.