டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

இந்தியாவில் இந்தியில் தான் முதன்முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. தற்போது அங்கே 16வது சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது.. துவக்கத்தில் ஷில்பா ஷெட்டி, அமிதாப்பச்சன் போன்றோர் ஒருசில சீசன்களை தொகுத்து வழங்கினாலும், பிக்பாஸ் என்றாலே சல்மான்கான் தான் என்று சொல்லும் வகையில் கிட்டத்தட்ட பதிமூன்று சீசன்கள் வரை அவர் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த 16 வது சீசனையும் அவர் தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படப்பிடிப்பு உள்ளிட்ட தனது வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி விட்டு ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன்-16 நிகழ்ச்சியை சல்மான்கானுக்கு பதிலாக அவர் மீண்டு(ம்) வரும்வரை பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் ஏற்று நடத்த இருக்கிறார். இதுகுறித்த புரோமோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. பாலிவுட்டை பொறுத்தவரை கரண் ஜோஹர் பல ரியாலிட்டி ஷோக்களை திறம்பட நடத்தியவர் என்பதால் சல்மான்கானுக்கு பதிலாக அவருக்கு இந்த வாய்ப்பு சென்றுள்ளது.
அதுமட்டுமல்ல கரண் ஜோஹர் முதன்முதலாக பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்த குச் குச் ஹோத்தா ஹை என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானபோது அதில் இரண்டாவது கதாநாயகனாக நடிப்பதற்கு பலரும் மறுத்த நிலையில் அப்போது சல்மான்கான் தான் அவருக்கு கை கொடுத்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது..