திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக சிறந்த நடிகையாக வலம் வருபவர் நடிகை சுஷ்மிதாசென். இவரது திரையுலக பயணத்தில் பல துணிச்சலான, சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். அந்தவகையில் தற்போது முதன்முறையாக திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுஷ்மிதா சென். ‛டாலி' என்கிற பெயரில் பிரபல சமூக ஆர்வலரான திருநங்கை ஸ்ரீகவுரி சாவந்த் என்பவரின் வாழ்க்கையை தழுவி உருவாகும் வெப் தொடர் ஒன்றில் தான் சுஷ்மிதா சென் இந்த அவதாரத்தில் நடிக்கிறார். இந்தத் தொடரை ரவி ஜாதவ் என்பவர் இயக்குகிறார். தற்போது இந்த வெப் தொடரில் திருநங்கையாக நடிக்கும் அவரது புகைப்படம் ஒன்றும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இதன் ஓரிஜினல் கதாபாத்திரமான ஸ்ரீகவுரி சாவந்த் கூறும்போது, 'திருநங்கை கதாபாத்திரங்களை நடிகைகள் ஏற்று நடிப்பது என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. அதிலும் சுஷ்மிதா சென் போன்ற முன்னணி நடிகைகள் இப்படி ஒரு சவாலான கதாபாத்திரத்தில் அதுவும் எனது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விதமாக நடிக்கிறார் என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. எனது கதை சினிமாவாகிறது என என் குருவிடம் கூறியபோது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேசமயம் அதில் சுஷ்மிதா சென் நடிக்கிறார் என்று கூறியபோது அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை” என்று கூறியுள்ளார். .