பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ! | 'லால் சிங் சத்தா' தோல்வி, அழைப்புகளைத் தவிர்க்கும் ஆமீர்கான் | மிருணாள் தாகூர் புகைப்படங்களைத் தேடும் ரசிகர்கள் | 75வது நாளில் 'விக்ரம்' | பார்ட் 1, 2 என ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ஜேக்குலின்! கொதித்தெளிந்த ரசிகர்கள்! | நிவின்பாலி படம் மூலம் மலையாளத்தில் நுழையும் அனிருத் | இப்பவும் ரொம்ப லவ் பண்றேன், ஆனால்? விவாகரத்துக்கு வைஷ்ணவியின் பளீச் பதில்! | முடிவுக்கு வந்த 7 வருட கதை; வருத்தத்தில் ரசிகர்கள்! | விஜய்-67 ; தீவிர கதை விவாதத்தில் லோகேஷ் கனகராஜ் | டாலடிக்கும் ரத்தினமே - நயனை வர்ணிக்கும் விக்கி |
2021ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படங்களில் முக்கியமான ஒரு வெற்றிப் படம் 'புஷ்பா'. சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம். தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது.
இப்படத்தில் இடம் பெற்ற 'ஓ அன்ட்டாவா' பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது. அப்பாடலுக்கு நடிகை சமந்தா கவர்ச்சிகரமாக நடனமாடி இருந்தார். தமிழில் அப்பாடல் 'ஊ சொல்றியா மாமா' என ஆன்ட்ரியா பாட இடம் பெற்றது.
சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பாலிவுட் ஹீரோவான சல்மான் கானிடம் “கடந்த வருடத்தில் எந்த சினிமா பாடல் உங்களை ரசிக்க வைத்தது ?,” என்ற கேள்விக்கு 'ஓ அன்ட்டாவா..' என பாடிக் காட்டுகிறார்.
இந்த வீடியோவை புஷ்பா படக்குழு, நடிகை சமந்தா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.