பிளாஷ்பேக்: மேடை நாடகம், வெள்ளித்திரை இரண்டிலும் முத்திரை பதித்த “வியட்நாம் வீடு” | இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் |
பாலிவுட் நடிகர் சல்மான்கானையும் அவரது தந்தை சலீம்கானையும் கொல்வோம் என்று ஒரு கும்பல் சலீம்கானுக்கு மிரட்டல் கடிதம் கொடுத்தது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது. சல்மான்கானுக்கும், அவரது தந்தைக்கும், அவரது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சல்மான்கானிடமும், சலீம் கானிடமும் வாக்குமூலத்தை போலீசார் பெற்றுள்ளனர். தங்களை கொலை செய்ய முயற்சிப்பது யார் என்று தங்களுக்கு தெரியவில்லை என்றும் கொலை செய்யும் அளவிற்கு எதிரிகள் யாரும் இல்லை என்றும் அவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பஞ்சாப் பாடகர் சித்துவை கொன்றது நாங்கள் தான் என்று தற்போது சிறையில் இருக்கும் பஞ்சாபை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் அறிவித்திருந்தார். தற்போது சல்மான் கொலை மிரட்டலுக்கும் அவர் காரணமாக இருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
இந்த தேடலில லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகள் சிலர் போலீசிடம் சிக்கி உள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சல்மான்கானை கொல்ல நாங்கள்தான் திட்டமிட்டோம், இதற்காக 4 லட்சம் ரூபாய் கொடுத்து நவீன துப்பாக்கியும் வாங்கினோம் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.