'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின்பு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சாகுந்தலம் புராண படத்தில் சகுந்தலை வேடத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இது தவிர யசோதா என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது குஷி என்ற தெலுங்கு படத்தில் விஜய்தேவரகொண்டா ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமந்தா பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங்குக்கு ஜோடியாக ஹிந்தியில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரன்வீர் சிங்குடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமந்தா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் புதிய ஹிந்தி படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக திரையுலக மத்தியில் பேசி வருகிறார்கள்.