அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கடந்த பல வருடங்களாகவே பாலிவுட் சினிமா தான் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கோடிகளை குவித்து முதலிடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் சமீப வருடங்களாக தென்னிந்திய படங்கள் குறிப்பாக தெலுங்கு படங்கள் ஆயிரம் கோடி என்கிற இலக்கை சர்வசாதாரணமாக தொட்டு பாலிவுட் படங்களை ஓவர்டேக் செய்ய ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் வடக்கு, தெற்கு என்கிற பேச்சு சினிமாவில் சமீபகாலமாக தலை எடுத்துள்ளது. இது பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள சாம்ராட் பிரித்விராஜ் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியிலும் கூட கேள்விகளாக எதிரொலித்தது.
இந்த படம் இந்தி மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அக்ஷய்குமாரிடம் தற்போது பாலிவுட் படங்களை தென்னிந்திய படங்கள் டாமினேட் செய்து வருகின்றனவே அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அக்சய்குமார், “தயவுசெய்து வடக்கு தெற்கு என்று திரையுலகை பிரித்து பேசுவதை நிறுத்துங்கள். இப்போதுதான் அனைவரும் இணைந்து பணியாற்றும் சூழல் அமைந்திருக்கிறது. இது தொடர வேண்டும். அல்லு அர்ஜுன் என்னுடைய படங்களில் உடனே நடிக்க வேண்டும்.. இன்னொரு தென்னிந்திய நடிகரின் படத்தில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்.. இப்போது முதல் இந்த புதிய நடைமுறை ஆரம்பிக்க வேண்டும்” என்று தனது விருப்பத்தை வெளியிட்டார்.