முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் |
அக்ஷய்குமார், சஞ்சய்தத், சோனுசூட், மனுஷி ஷில்லர் நடித்துள்ள படம் சாம்ராட் பிருத்விராஜ். ஹிந்தியில் தயாராகி உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளிவருகிறது.
12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜபுத்திர மன்னர் பிருத்விராஜ் சவுகான் வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம். முகலாய சாம்ராஜ்யத்தை முறியடித்த இந்துஸ்தானி சாம்ராஜ்யத்தை சொல்லும் படம். இந்த படத்தின் சிறப்பு காட்சி டில்லியில் நடந்தது. இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷா குடும்பத்துடன் சென்று பார்த்தார். படம் முடிந்த பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
13 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் தியேட்டரில் படம் பார்க்கிறேன். இந்தியாவின் கலாச்சாரப் போர்களை சித்தரிக்கும் இப்படத்தைப் பார்த்து ரசித்ததோடு இல்லாமல், இந்தியர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். இந்தப் படம் பெண்களை மதிக்கும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்திய கலாச்சாரத்தை சித்தரிக்கிறது.
இடைக்காலத்தில் பெண்கள் அனுபவித்து வந்த அரசியல் அதிகாரம் மற்றும் தேர்வு சுதந்திரம் பற்றி இந்தப் படம் பேசுகிறது. 2014ல் இந்தியாவில் ஒரு கலாச்சார விழிப்புணர்வு தொடங்கியது. அது இந்தியாவை மீண்டும் உயரத்திற்கு கொண்டு செல்லும். என்றார்.
இதற்கிடையில் லக்னோவில் இந்த படத்தை பார்த்த உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் படத்தை பாராட்டி இருப்பதோடு, வரிவிலக்கும் அளித்துள்ளார்.