நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சல்மான் கான். சில வருடங்கள் முன்பு வரை அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தவர். தற்போதுதான் சர்ச்சைக்குரிய செய்திகளில் அதிகம் அடிபடாமல் இருக்கிறார்.
2006ம் ஆண்டு மான்களை வேட்டியாடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கின் காரணமாக சில நாட்கள் அவர் சிறையில் இருக்க நேரிட்டது. தொடர்ந்து பல வருடங்கள் நடந்த அந்த வழக்கில் அவர் 2018ம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். அந்த சமயத்தில் மான்களை வேட்டையாடியதற்காக சல்மான் கானை கொல்லப்போவதாக பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னாய் அறிவித்திருந்தார். இந்த லாரன்ஸ் பிஷ்னாய் தான் சமீபத்தில் பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலாவைக் கொலை செய்ததாக பொறுப்பேற்றவர். தற்போது லாரன்ஸ் பிஷ்னாய் பல்வேறு வழக்குகளின் காரணமாக டில்லி, திகார் சிறையில் இருக்கிறார்.
பாடகர் சித்து கொல்லப்பட்ட நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பிஷ்னாய் சல்மானுக்கும் கொலை மிரட்டல் விடுத்த காரணத்தால் தற்போது சல்மான் கானிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பையில் அவர் வசிக்கும் அபார்ட்மென்ட்டைச் சுற்றி கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சல்மானும் தனது தனிப்பட்ட பாதுகாவலர்களை அதிகப்படுத்தியிருக்கிறாராம்.