இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' | அதை மஞ்சுவாரியரிடமே போய் கேளுங்கள் ; நடிகை பார்வதி காட்டம் |
வெளிநாட்டில் இருந்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் புகழ்பெற்றாலும், இதன் கண்டன்ட் உரிமம் வெளிநாட்டு நிறுவனத்திடம் உள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியை போன்றே இந்தியாவில் லாக்கப் என்ற நிகழ்ச்சியை உருவாக்கி இருக்கிறார்கள். பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கிறார். இந்த நிகழ்ச்சியை கங்கனா ரணவத் தொகுத்து வழங்குகிறார்.
இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் மொத்தம் 72 நாட்கள் சிறையில் அடைக்கப்படுவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டிற்குள் சுதந்திரமாக சொகுசாக இருப்பார்கள். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் சிறையில் இருப்பது போன்று எந்த வசதியும் இல்லாமல் இருப்பார்கள்.
சர்ச்சை நாயகியான கங்கனா ரணாவத் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதால் ரசிகர்களிடையே இந்நிகழ்ச்சி மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. விரைவில் இந்நிகழ்ச்சி ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தடைகேட்டு ஐதராபாத்தை சேர்ந்த தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது. லாக்கப் டைட்டிலும், அதன் கண்டன்டும் எங்களுடையது. அதனை நாங்கள் காப்புரிமை பதிவு செய்துள்ளோம். எனவே இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், சம்பந்தபட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.