பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
அட்டக்கத்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த பா.ரஞ்சித் அதன்பிறகு மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை படங்கள் மூலம் கவனம் ஈர்த்தார். தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரிகிருஷ்ணன், 'டான்சிங் ரோஸ்' ஷபீர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
சார்பட்டா பரம்பரை படத்துக்கு முன்பே ஜார்கண்ட் பழங்குடியின மக்களின் தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை திரைப்படமாக்க முயற்சித்தார் பா.ரஞ்சித். பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களால் அந்த முயற்சி தள்ளிப்போனது. தற்போது பிரபல இந்தி பட தயாரிப்பு நிறுவனமான நமாஹ் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் ஷரீன் மன்த்ரி, கிஷோர் அரோரோ ஆகியோர் தயாரிக்கிறார்கள். 'பிர்சா' என்ற தலைப்பில் இந்தப் படம் தற்போது தயாராகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. பான் இந்தியா படமாக இது உருவாவதால் எல்லா மொழி நட்சத்திரங்களும் இதில் நடிப்பார்கள் என்று தெரிகிறது.