ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஹிந்தியில் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் கங்குபாய் கத்தியவாடி. இந்த படத்தில் ஆலியா பட் கதையின் நாயகியாக நடித்துள்ளா. அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியாகியுள்ளது. திரைக்கு வந்த மூன்று நாட்களில் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ள இந்தப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்துள்ள ஆலியாப்பட்டை தொடர்பு கொண்டு அவரது நடிப்பை பாராட்டி இருக்கிறார் சமந்தா. இது குறித்து சோசியல் மீடியாவில் அவர் கூறுகையில், இது உங்கள் மாஸ்டர் பீஸ் படம். உங்களது நடிப்பை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை. இந்த படத்தில் உங்களது ஒவ்வொரு வசன உச்சரிப்பும் உடல் மொழியும் நினைவில் நீங்காமல் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.