கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் |
மும்பை : போதை வழக்கில் 25 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் ஜாமினில் இன்று(அக்., 30) வெளியே வந்தார்.
சொகுசு கப்பலில், போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டனர். 25 நாட்களுக்கும் மேலாக சிறை வாசத்தில் இருந்த ஆர்யன் கானுக்கு நேற்று முன்தினம் மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஜாமின் நிபந்தனைகளை உயர் நீதிமன்றம் நேற்று வெளியிட்டது.
உத்தரவாதமாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி ஜாமின் பெற உத்தரவிட்டது. நேற்றே அவர் ஜாமினில் வெளிவருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும் உரிய நேரத்திற்குள் ஜாமின் உத்தரவு சிறை நிர்வாகத்திற்கு வந்து சேராததால் ஆர்யன் கான் நேற்று விடுவிக்கப்படவில்லை. நேற்று இரவும் அவர் சிறையில் கழிக்கவேண்டி இருந்தது.
இந்நிலையில் இன்று காலை அவர் சிறையில் இருந்து விடுதலையானார். ஆர்தர் ரோடு சிறையிலிருந்து வெளியே வந்த ஆர்யன் காரில் ஏறி நேராக அவரது மன்னத் வீட்டிற்கு சென்றார். நேற்றே ஆர்யன் கான் விடுதலையாவார் என எண்ணி ரசிகர்கள் தொடர்ந்து நேற்று முதல் ஷாரூக்கானின் இல்லத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர்.