பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் |
தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான கவுரவம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை யாமி கவுதம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நிலவிய சமயத்தில் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென ஆதித்யா தர் என்பவரை திருமணம் செய்துகொண்டு, ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை தந்தார்.
கொரோனா காலகட்டம் என்பதால் அப்போது கணவருடன் சேர்ந்து வெளி இடங்களுக்கு செல்ல முடியாமல் இருந்த யாமி கவுதம், தற்போது தம்பதி சகிதமாக பல இடங்களுக்கு சுற்றுலா கிளம்பி விட்டார். அந்தவகையில் சமீபத்தில் அம்ரிஸ்தரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ள யாமி கவுதம், பொற்கோவில் பின்னணியில் தெரியும்படி தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.