ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
பழம்பெரும் பாலிவுட் நடிகை மினு மும்தாஜ். 1950 மற்றும் 60 களில் பிரபலமாக இருந்தவர். திரைப்படங்களில் நடன நடிகையாகவும், நடன இயக்குனராகவும் பணியாற்றி நடிகை ஆனவர். முகல் ஏ ஆசம் படத்தில் இடம் பெற்ற, ஜப் ராத் ஹே ஹைசி மத்வாலி என்ற பாடலில் இவருடைய நடனம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
முதுமை காரணமாக சினிமாவை விட்டு விலகி கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் மகள் வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவரது உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவு சில நாட்களுக்கு பிறகே தெரியவந்துள்ளது. மினு மும்தாஜுக்கு கணவர் அலி அக்பர், ஒரு மகன், மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.