சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

டில்லியில் 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தேசிய விருதுக்காக தேர்வு பெற்றவர்கள் கலந்து கொண்டு தங்களது விருதுகளை பெற்றுக் கொண்டனர். அந்தவகையில் தமிழில் அசுரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தனுஷுக்கு தேசிய விருதுவழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்தும் கலந்துகொண்டு மணிகர்ணிகா மற்றும் பங்கா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுகொண்டார், அப்போது நடிகர் தனுஷுடன் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டார் கங்கனா. தலைவி படத்தில் நடித்துள்ள கங்கனா சமீபகாலமாக தமிழ் திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். அந்தவகையில் அடுத்து தனுஷுடன் அவர் ஒரு படத்தில் இணைந்து நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.