பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் | த மெட்ராஸ் மிஸ்டரி : அது சாந்தனு அல்ல, யோஹன் சாக்கோ | மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சித்தார்த் | இளயராஜாவை பார்த்து வளர்ந்தவன் நான்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் | 21ம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் |
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் ராஜ்குந்த்ரா. ஆபாச படங்கள் தயாரித்து அதை விநியோகம் செய்து வந்த வழக்கில் இவரை மும்பை போலீசார் ஜூலை மாதம் 19ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து செப்டம்பர் 20ம் தேதி அவர் ஜாமீனில் விடுதலையானார். தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாலிவுட் கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா கடந்த 14ம் தேதி மும்பை ஜுஹு பகுதி காவல் நிலையத்தில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் கணவர் ராஜ் குந்த்ரா மீது புகார் அளித்தார். அவர்கள் தன்னை ஏமாற்றியதுடன், மனதளவில் பாலியல் தொல்லை தருவதாக தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரை பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் 50 கோடி ரூபாய் கேட்டு ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் ஷெர்லின் சோப்ரா மீது மும்பை நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். பொய்யான புகார் கூறி தங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருக்கிறார்கள்.