ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அலா வைகுந்தபுரம்லோ. த்ரிவிக்ரம் இயக்கத்தில், தமன் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகப் பல்வேறு சாதனைகளையும் உடைத்தது. அல்லு அர்ஜுனின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்தது. படத்தில் இடம்பெற்ற ராமுலோ ராமுலா... என்ற பாடல் தெலுங்கு சினிமா சரித்திரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட பாடலானது.
கடந்த ஆண்டு வெளியான இந்த படம் பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இதன் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியாக பூஷண் குமார், கிருஷ்ணன் குமார், ராதா கிருஷ்ணா, அமன் கில் மற்றும் அல்லு அரவிந்த் ஆகியோர் ரீமேக் உரிமையை பெற்றனர்.
படத்திற்கு ஷெஸாடா என்று டைட்டில் வைத்துள்ளனர். அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தில் கார்த்திக் ஆர்யன், பூஜா ஹெக்டே கதாபாத்திரத்தில் கீர்த்தி சனோன் நடிக்கிறார்கள். இவர்களுடன் ப்ரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரோஹித் தவான் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று தொடங்கியது. படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.