குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
நடனப் இயக்குனரின், நடிகைகளின் காதலையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. நடன இயக்குனராக இருந்து ஹீரோவாக மாறிய போதே தன்னுடன் நடித்த நாயகியுடன் அப்போது அதிகமாக கிசுகிசுக்கப்பட்டார். அதற்குப் பிறகு யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தி வந்தார். தன்னுடைய அப்பா, அம்மா எதிர்த்தாலும் தன் மகன்கள் மீது அளவுக்கதிமாக பாசம் வைத்து நலமாக இருந்தார். திடீரென விரல் வித்தை நடிகரால் காதலிக்கப்பட்டுக் கைவிடப்பட்ட நடிகை நாயகியாக நடித்த படத்தை இயக்கிய போது அந்த நடிகையுடன் நெருக்கமானார். அவரை மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு காதல் கொழுந்து விட்டு எரிந்தது. அதன் பின் திடீரென இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
நடன இயக்குனரும் மும்பைப் பக்கம் சென்று முன்னணி இயக்குனர்களில் ஒருவராக ஆனார். அங்கும் சில நடிகைகளுடன் அதிகமாகவே கிசுகிசுக்கப்பட்டார். தமிழில் உச்ச நட்சத்திரம் நடித்த படத்தில் அறிமுகமான வாரிசு நடிகை ஒருவரைக் காதலிப்பதாகக் கூட செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவை கிசுகிசுக்களாகவே இன்னும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே தற்போது புதிதாக ஒரு கன்னட நடிகையுடன் நடன இயக்குன நடிகர் பல இடங்களில் ஒன்றாகச் சுற்றுவதாக தகவ் வெளியாகியுள்ளது. பல பார்ட்டிகளில் இருவரையும் ஒன்றாகப் பார்த்தவர்கள் இந்தத் தகவலை கசிய விட்டிருக்கிறார்கள். அந்த கன்னட நடிகை மிகவும் 'தேஜஸ்' ஆக இருப்பாராம். நடிகையிடம் கேட்டால் வழக்கம் போல நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று மட்டுமே சொல்கிறாராம்.