மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சிம்பு! | மீண்டும் வாடிவாசல் தள்ளிப்போகிறதா? ரெட்ரோ படத்தின் புரமோஷனில் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா! | ஒரே நாளில் சந்தானம், சூரி படங்களுடன் மோதும் யோகி பாபு | 45 வயது சந்தானத்துக்கு அம்மாவான கஸ்தூரி ! | சுதாவின் அடுத்த பட ஹீரோ சிம்பு! - ‛வேட்டை நாய்' நாவல் படமாகிறது! | வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன்! | நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும் கே.எஸ். அதியமான்! | ‛மெய்யழகன்' குறித்து நெகிழ்ந்து பேசிய நானி! | பல விஷயங்களில் மனம் மாறிய நடிகை | 1000 கோடி வசூல் கனவுக்கு சிக்கல்: அதிர்ச்சியில் உச்ச நடிகர் |
தமிழ் சினிமா எவ்வளவோ நடிகர், நடிகைகளை கண்டுள்ளது. எவ்வளவோ பேர் வருகிறார்கள்.. போகிறார்கள்... ஆனால் சிலர் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள். அந்த வரிசையில் இவருக்கும் ஒரு இடமிருக்கிறது. 'அவரா இவர்' என 2015ல் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்கவராக இருந்த இவரை பார்த்து கேள்வி எழுப்பியவர்கள் பலர். ஆனாலும் தனக்கு ஏற்பட்ட பல தடைகளையும் தாண்டி ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக தனி இடத்தை பிடித்திருக்கிறார் இந்த நடிகை.
இதற்கு திருத்தணி முருகனும், மதுரை மீனாட்சியும் தான் காரணம் என கூறுகிறார் நடிகை சரண்யா நாக். 'காதல் சரண்யா' என்றால் 'சட்' என அனைவருக்கும் நினைவுக்கு வந்து விடும். 2004ல் வெளியான காதல் படத்தில் கதாநாயகியான சந்தியாவின் தோழியாக படம் முழுக்க வந்து அனைவரது கவனத்திலும் நின்றவர். அந்த படத்தை தொடர்ந்து நீ வருவாய் என, பேராண்மை, மழைக்காலம் என தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் கலக்கியவர். தற்போது டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் தமிழ் சினிமாவில் டப்பிங் ஸ்டூடியோ வைத்துள்ள ஒரே பெண் ஆகவும் திகழ்கிறார்.
அவருடன் பேசியதிலிருந்து...
சென்னை வடபழநி நான் பிறந்து வளர்ந்த இடம். கோடம்பக்கம் பள்ளியில் படித்தேன். 'நீ வருவாய் என' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிட்டியது. 9ம் வகுப்பு படித்த போது ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் என்னை அறிமுகப்படுத்தினார். 2004ல் அவர் இயக்கிய காதல் படத்தில் கதாநாயகி தோழி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்தார்.
நான் தான் கதாநாயகியாக நடிக்கயிருந்தது. ரொம்ப சின்ன பொண்ணாக இருந்ததால் சந்தியாவிற்கு அந்த வாய்ப்பு சென்றது. அந்த படம் பெரிய பிரேக் கொடுக்க 'ஒரு வார்த்தை பேசு' படத்தில் கமிட் ஆனேன். அந்த படம் கைவிடப்பட்டது. தெலுங்கில் 'பத்தாம் வகுப்பு' பட வாய்ப்பு கிட்டியது. என் நடிப்பை கவனித்த இயக்குனர் ஜனநாதன் தன் பேராண்மை படத்தில் வசுந்திரா, தன்சிகாவுடன் என்னையும் ஐந்து பெண்களில் ஒருவராக நடிக்க வைத்தார். படம் பெரிய ஹிட். பிறகு பல படங்களில் நடித்தேன்.
2015ல் ைஹப்போதைராய்டு பிரச்னை. 100 கிலோ வரை எடை ஏறியது. பார்த்த பலரும் சரண்யாவா என கேட்க துவங்கினர். ஐந்தாண்டுகளுக்கு சினிமா பக்கம் தலைகாட்டவில்லை. 2020ல் நல்லா பேசுகிறாயே ஏன் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக கூடாது என தோழிகள் உசுப்பேத்தி விட்டனர். டப்பிங் கார்டு வாங்கி படங்களில் டப்பிங் பேச துவங்கினேன். எந்த படம், கதாபாத்திரம் என பார்க்காமல் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டேன்.
இந்த நிலையில் தான் 2022ல் டப்பிங் ஸ்டூடியோ துவக்கினால் என்ன என ஐடியா தோன்றியது. தற்போது தமிழ் சினிமாவில் டப்பிங் ஸ்டூடியோ வைத்துள்ள பெண் நானாக தான் இருப்பேன். ஸ்டூடியோ துவங்கியதும் முதல் படமாக இயக்குனர் ரஞ்சித்தின் புளு ஸ்டார் பண்ணினோம். படம் படுஹிட். அடுத்து ஹிந்தி அமரன், தமிழ் தேவரா, மம்முட்டியின் பிரம்மாயுதம் என பல ஹிட் படங்களுக்கு என் ஸ்டூடியோவில் டப்பிங் நடந்தது.
பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஒருமுறை நடிகர் யோகிபாபு பேட்டி படித்தேன். அவர் திருத்தணி முருகன் கோயிலுக்கு அடிக்கடி செல்வதற்கான காரணத்தை சொல்லியிருந்தார். அங்கு சென்று திரும்பியதும் காமெடி ஆக்டராக வாய்ப்பு கிடைத்தை சொன்னார். எனக்கும் அங்கு செல்ல ஆசை ஏற்பட்டது.
அதுபோல 'காதல்' படப்பிடிப்பு மதுரையில் நடந்தாலும் மதுரையை பற்றி பரிட்சியம் அப்போது இல்லை. நான் கதாநாயகியாக நடித்த ஒரு படத்துக்காக மதுரையில் தங்கிய போது தான் மீனாட்சி கோயிலுக்கு செல்லும் பேறு கிட்டியது. மீனாட்சி அம்மனை பார்த்த மாத்திரத்தில் என்னவோ போலிருந்தது.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மதுரை சித்திரை திருவிழா பார்க்க வந்து விடுவேன். மீனாட்சி திருக்கல்யாணத்தையும், தேரோட்டத்தையும் சில ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். தெப்பக்குளம் படிக்கட்டில் அரை மணி நேரம் அமர்ந்தால் எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் மனசு லேசாயிடும்.
அதுமட்டுமா மதுரைகாரங்க காட்டும் பாசம் இருக்கிறதே. எப்ப உங்களை படத்தில் பார்க்கலாம் என நலம் விசாரித்து விடுவர். அதுவும் எவ்வளவோ இடங்களுக்கு சென்று இருக்கிறேன். மதுரை பிரியாணியும், கோலா டேஸ்ட் போல வேறு எங்கும் இருக்காது. மதுரை வந்தால் இவற்றை ஒரு கை பார்க்காமல் செல்ல மாட்டேன்.
இயக்குனர் சீனுராமசாமி அவரது கோழிப்பண்ணை படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். அதையடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது தான் உடம்பை குறைத்து வருகிறேன். 'பிட்' ஆனதும் நடிகையாகவும் ஒரு ரவுன்ட் வருவேன் என்றார் சந்தோஷமாக.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மதுரை சித்திரை திருவிழா பார்க்க வந்து விடுவேன். மீனாட்சி திருக்கல்யாணத்தையும், தேரோட்டத்தையும் சில ஆண்டுகளாக தொடர்ந்து பார்த்து வருகிறேன்.