'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே |

தமிழில் ‛தொட்டான் சிணுங்கி, தூண்டில்' ஆகிய படங்களை இயக்கியவர் கே.எஸ். அதியமான். அதன் பின்னர் ஹிந்தி படங்களை இயக்கி வந்தார். கடந்த சில வருடங்களாக இவர் இயக்குனராக எந்தவொரு படங்களையும் இயக்கவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். தமிழில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் முதன்மை கதாபாத்திரங்களில் ரேவதி, விதார்த் மற்றும் லிஜோ மொல் ஜோஸ் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வி ஹவுஸ் நிறுவனத்தின் மூலம் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.