ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் | கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி உடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய விஜய் | கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி |
பூ நடிகை கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலில் மட்டும் தீவிர கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான உச்ச நடிகரின் படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டார். அந்த படத்துக்கு பின் தனது உடலை வேகமாக இளைத்து இளம் நடிகர்களுக்கு நிகராக மாற்றினார். அவரது இந்த மாற்றம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. உச்ச நடிகரின் படத்தில் டம்மி வேடம்தான் என்றாலும் நடிகை உடல் இளைத்ததை பார்த்த தமிழ் சினிமா இயக்குனர்கள் அவரை நடிக்க வைக்க அணுகியுள்ளனர். அப்படி வந்த அந்த வாய்ப்புகளை நடிகை தவிர்க்கிறாராம்.
தொடக்கத்தில் சில காலம் அரசியலுக்கு விடுமுறை விட்டு நடிக்கலாம் என்று இருந்தவரை கணவர்தான் அடுத்து வரும் பார்லிமென்ட் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியலில் மட்டும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் இனி டிவி சீரியல் தயாரிப்பு மட்டும்தான். சினிமாவில் நடிப்பு இல்லை என்று நடிகை முடிவெடுத்துள்ளார்.