ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |

கொரோனா முதல் அலை கடந்த வருடம் மார்ச் மாதம் பரவிய போது, தியேட்டர்கள் மூடப்பட்டன. தியேட்டர்களில் மட்டுமே வெளியாகி வந்த புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின. அதன்பின் டிவிக்களிலும் நேரடியாக படங்களை வெளியிட ஆரம்பித்தார்கள்.
அந்த விதத்தில் குறுகிய காலத்தில் ஓடிடியில் அதிக படங்களை வெளியிடும் நடிகராக விஜய் சேதுபதி இடம் பிடிக்கப் போகிறார். தற்போது தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதிதான். அவரது படங்கள் எப்படி தியேட்டர்களில் அடுத்தடுத்து வெளியாகும் என்ற கவலை அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நிறையவே இருந்தது. நல்ல வேளையாக ஓடிடி தளங்களில் புதிய படங்களின் வெளியீடு நடப்பதால் அவரது சில படங்கள் தற்போது தப்பித்துக் கொண்டுள்ளன.
விஜய் சேதுபதி டாப்
விஜய் சேதுபதி நடித்த க.பெ.ரணசிங்கம் படம் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் கட்டணம் செலுத்தி பார்க்கும் முறையில் வெளிவந்தது. அதன்பின் இந்த வருடத்தில் முதலில் அவர் நடித்துளள துக்ளக் தர்பார் படம் செப்டம்பர் 10ம் தேதி டிவியில் நேரடியாகவும், அன்றே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது.
![]() |
நடிகைகளைப் பொறுத்தவரையில் ஐஸ்வர்யா ராஜேஷ் “க.பெ.ரணசிங்கம், திட்டம் இரண்டு, பூமிகா(முதலில் டிவி அன்றே ஓடிடி வெளியீடு) ஆகிய 3 படங்களுடன் முதலிடத்தில் உள்ளார். நடிகை நயன்தாரா, “மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண்”, நடிகை வாணி போஜன் ‛‛லாக்கப், மலேஷியா டூ அம்னிஷயா ஆகியோர் தலா இரண்டு படங்களுடன் ஓடிடி வெளியீட்டில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.
![]() |
தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன், கடந்த வாரம் முதல் திறக்கப்பட்டாலும் இன்னும் முழுமையாகத் திறக்கப்படாமல் உள்ளன. பெரிய நடிகர்களின் புதிய படங்கள் எதுவும் வராத காரணத்தால் தியேட்டர்களுக்கும் மக்கள் வரவில்லை என்கிறார்கள்.
![]() |
ஆனாலும், தியேட்டர்களுக்குப் போட்டியாக செப்டம்பர் 10ம் தேதி விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷிகண்ணா நடித்துள்ள துக்ளக் தர்பார் டிவியில் நேரடியாக வெளியாகிறது, அன்றே ஓடிடி தளத்திலும் வெளியாகிறது. சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படம் செப்டம்பர் 10ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
![]() |
தியேட்டர்களில் படத்தை வெளியிட்டு, அதை விளம்பரப்படுத்தி, அது ரசிகர்களுக்குப் பிடித்து, அவர்கள் தியேட்டர்களுக்கு வந்து படத்தைப் பார்த்து, தியேட்டர்காரர்களும் அவர்கள் வசூல் போக மீதியைக் கொடுத்து வாங்கும் லாபத்தை விட ஓடிடியில் ஒரே ஒரு நிறுவனத்திற்கு படத்தை வெளியிட்டு இந்தக் கையில் ஒப்பந்தம், அந்தக் கையில் பணம் வாங்கும் வழக்கம் தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
![]() |
வரும் மாதங்களில் இன்னும் பல ஓடிடி வெளியீடுகள் வர உள்ளது. தியேட்டர்கள் ஒரு பக்கம் திறக்கப்பட்டிருந்தாலும் ஓடிடி வெளியீடுகளும் ஏட்டிக்குப் போட்டியாக வருகின்றன. அதோடு டிவியில் நேரடி வெளியீடு என்பதும் தியேட்டர்காரர்களுக்கு கடும் போட்டியாக வருகிறது. ஒரு பக்கம் கொரோனா பாதுகாப்பு, மறுபக்கம் ஓடிடி, டிவி வெளியீடுகள், இன்னொரு பக்கம் மக்களிடம் அதிக பணப்புழக்கம் இல்லாதது, இவற்றோடு குழந்தைகளின் படிப்பு எதிர்காலம் குறித்த கவலை, குடும்பப் பிரச்சினை இவற்றை மீறி மக்கள் தியேட்டர்களுக்கு எப்படி மீண்டும் வருவார்கள் என்பது அடுத்த ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும்.
![]() |




