Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

நான் பெரிய பணக்காரி இல்லை, இதை சொல்ல அசிங்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன் பளீச்

06 ஜூன், 2021 - 14:20 IST
எழுத்தின் அளவு:
I-am-not-very-rich-girl-says-Shrutihaasan

‛தந்தை எட்டடி பாய்ந்தால் மகள் நான் 16 அடி பாய்வேன்' என நடிப்பு, நடனம், இசை, பாட்டு என பல துறைகளில் களமிறங்கி சகலகலா வல்லியாக வரும் வரும் ஸ்ருதிஹாசனிடம் கொரோனா ஊரடங்கில் ஒரு பளீச் பேட்டி...

கொரோனா ஊரடங்களில் எப்படி நேரத்தை செலவிடுறிங்க
சமையல் செய்ய, முன்பை விட வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள கற்றேன். கொரோனா நமக்கு பல விஷயங்களை கற்று கொடுத்துள்ளது. வெளியே போக முடியாததால் வீட்டில் இருந்து கொண்டே எதற்கு, எப்படி நேரம் செலவிடலாம் என தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு

நல்லா தமிழ் பேசும் நீங்கள் தமிழில் அதிகம் நடிப்பதில்லை ஏன்
ஒன்றரை ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் பிரேக் எடுத்தேன்.லாபம் படம் 3 ஆண்டுகளாக போகுது. ஒரு படம் நடித்தால் அது பேசப்படும் அளவு இருக்கணும். பிற மொழிகளிலும் நடிப்பதால் பேலன்ஸ் செய்ய வேண்டி இருக்கு. இனி கண்டிப்பா தமிழில் கவனம் செலுத்துவேன்.

பிரபாஸுடன் நடிக்கும் சலார் படம் பற்றி சொல்லுங்களேன்
சிறு பகுதி தான் ஷூட்டிங் போயிருக்கு. பிரபாஸ் பொருத்தவரை ரொம்ப எளிமையாக பழக கூடியவர். நிறைய எனர்ஜி அவர்கிட்ட இருக்கு.

இ.எம்.ஐ., கட்டணும்னு சொல்லி இருக்கீங்களே உங்களுக்கு என்ன கஷ்டம்

ஏன் கஷ்டம் இருக்கக் கூடாதா... நடிகையா இருந்தா இ.எம்.ஐ., இருக்காதா என்ன. உதாரணத்துக்கு ஒரு வீடு, கார் வாங்குவதா இருந்தால் கடன் வாங்க வேண்டி இருக்கும். எங்களுக்கும் பிரச்னைகள் இருக்கு. நான் பெரிய பணக்காரி இல்லை. இதை சொல்ல ஆச்சரியம், அசிங்கப்பட ஒன்றுமில்லை என நினைக்கிறேன்

சுயமாக சம்பாதித்து, தனித்து வாழும் பெண்களுக்கான சவால்கள்

சவால்கள் பலருக்கு பல வகையில் இருக்கு, நான் பிறந்த வீடு, ஊர், குடும்பம், சூழல் ஒப்பிட்டால் நான் ரொம்ப லக்கியா நினைக்கிறேன், பெண்களுக்கான அடிப்படை கல்வி, பாதுகாப்பு நிறைய இடத்தில் இல்ல. இதுவும் ஒரு வகை பிரச்னை தான். கிடைத்த சுதந்திரத்தை வைத்து சமூகத்தில் எதை செய்யலாம், கூடாதுங்குற பொறுப்பை உணர்ந்து பெண்கள் நடக்க வேண்டும்.

யாருடைய இயக்கத்தில் நடிக்கணும் என லிஸ்ட் எதும் இருக்கா
பெரிய லிஸ்ட் இருக்கு... புதுமுகமாக இருக்கலாம், அல்லது பழைய இயக்குனராக இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல இயக்குனர் படத்தில் நான் நடிக்கணும் அவ்வளவு தான்.

எதிர்காலத்தில் அப்பா கமல் போல் அரசியலில் ஆர்வம் வருமா
அரசியல் ஆர்வம் எல்லாம் எனக்கு வராதுன்னு தான் நினைக்கிறேன்.

அப்பா அம்மாவிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள் என்ன

அப்பாவிடம் எதற்கும் பயம் இல்லாமை பற்றியும், அம்மாவிடம் எல்லார்கிட்டயும் ஈசியா தொடர்பில் இருப்பது பற்றியும் கற்றேன். எப்போதும் அவர்கள் நீ எங்கே இருக்கீங்க, என்ன சாப்பிட்ட என கேட்பது எனக்கு பிடிக்கும். குடும்பம் மட்டுமின்றி வெளி உலகிலும் அம்மா அப்படி தான் பழகுவாங்க.

உங்களது அடுத்தடுத்த படங்கள் என்ன
ஒரு ஹிந்தி சீரியல், பிரபாஸுடன் சலார் நடிக்கிறேன். விஜய் சேதுபதியுடன் நடித்த லாபம் விரைவில் வெளிவரும். அடுத்து நிறைய படங்கள் நடிப்பது குறித்து யோசிக்கணும்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா காலத்தில் வெப் சீரிஸ் - தமன்னா உற்சாகம்கொரோனா காலத்தில் வெப் சீரிஸ் - தமன்னா ... இன்ஸ்டா இளவரசி தர்ஷா குப்தா இன்ஸ்டா இளவரசி தர்ஷா குப்தா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
08 ஜூன், 2021 - 13:02 Report Abuse
Swaminathan Chandramouli அப்பா கமல் அம்மா சாரிக்காவை நிராகரித்து விவாகரத்து செய்தது சரிதான் என்று இந்த சுஸ்ருதிஹாசன் பேசி இருக்கிறார்
Rate this:
Dharma - Madurai,இந்தியா
08 ஜூன், 2021 - 11:47 Report Abuse
Dharma பணக்காரி இல்லை என்பதற்கு யாராவது அசிங்கப்படுவார்களா? இந்த மாதிரி டிரஸ் போட்றதுக்குத்தான் அசிங்கப்படணும்.
Rate this:
Ram Ram - கொங்கு நாடு,இந்தியா
07 ஜூன், 2021 - 21:08 Report Abuse
Ram Ram அப்பாவிடம் நூறு கோடி சொத்து உள்ளது . திண்ணை காலி ஆனால் தான் பணக்காரி ஆவேன்
Rate this:
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
07 ஜூன், 2021 - 19:02 Report Abuse
T.Senthilsigamani இந்த படத்தை பார்த்தால் இவர் தாயின் வளர்ப்பு அல்ல .தந்தையின் வளர்ப்பு என தெள்ள தெளிவாக புரிகிறது
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07 ஜூன், 2021 - 02:30 Report Abuse
J.V. Iyer கமலின் மகள் என்பதால்...காலம்டா. ..
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in