சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

திரைப்படங்களில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து தற்போது வில்லனாக முன்னேறியுள்ளார் இளம் நடிகர் அருண்மொழி தேவன்.
லொகேஷன் மேனேஜராக சிறப்பாக பணி செய்து வரும் இவர், வறண்ட மாவட்டம் என அடையாளப்படுத்தப்படும் ராமநாதபுரத்திலும் மனதை கொள்ளையடிக்கும் அழகிய இடங்கள் உள்ளன என சினிமாத் துறையினரின் கவனத்தை ராமநாதபுரம் பக்கம் ஈர்த்துள்ளார்.
நடிகர் அருண்மொழி தேவன் கூறியதாவது:
முதுகுளத்துார் கூவர்கூட்டம் கிராமம் சொந்த ஊர்.விவசாய கூட்டுக்குடும்பத்தை சேர்ந்தவன். பி.இ., படித்துவேலைக்காக எனது அக்கா கணவர் கவிஞர் ஞானகரவேல் உடன் சென்னையில் தங்கியிருக்கும் அவரது உதவியால் சினிமா வாய்ப்பு கிடைத்தது. முதல் படமாக பாண்டியநாடு படத்தில் சிறிய ரோலில் நடித்தேன்.
பிறகு கொம்பன், சண்டிவீரன், ராஜாமந்திரி, கூட்டத்தில் ஒருவன், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன,மதுரை வீரன், ஜூங்கா, க/பெ ரணசிங்கம், ராவணக்கோட்டம் படங்களில் நடித்துள்ளேன்.ஒரு படத்தில் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்துள்ளது. பெயர் முடிவாகவில்லை. தயாரிப்பாளர் பிரச்னையால் நின்றுள்ளது. மீண்டும் துவக்க வேலைகள் நடக்கிறது.
நடிப்புடன் லொகேஷன் மேனேஜராகவும் 13 சினிமாக்களுக்கு பணிபுரிந்துள்ளேன். க/பெ ரணசிங்கம், கொம்பன், காரீ, ராவணக்கோட்டம், அறம் உள்ளிட்ட படங்கள் ராமநாதபுரம் கிராமங்களை சுற்றி எடுக்கப்பட்டவை.தற்போது சினிமாத்துறை பார்வை ராமநாதபுரம், ராமேஸ்வரம் பக்கம் திரும்பியுள்ளது.
நான் பிறந்த மாவட்டமான ராமநாதபுரம் மக்களுக்கு உதவி செய்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவது மனநிறைவை தருகிறது. கிடைக்கும் வருமானத்தில் அறக்கட்டளை துவங்கி கழிப்பறை வசதி இல்லாத வீடுகளுக்கு இலவசமாக கட்டிக்கொடுத்துள்ளேன்.
திருட்டை தடுக்க எங்க ஊரில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த உதவி செய்துள்ளேன். இந்த கல்வி ஆண்டில் மிகவும் சிரமப்படும் 7 குழந்தைகளை எனது செலவில் படிக்க வைக்க உள்ளேன்.
விஜய் சேதுபதி சிறிய வேடத்தில் நடிக்க துவங்கி இன்று ஹீரோவாக வளர்ந்துள்ளார், அவரை ரோல் மாடலாக கொண்டு வாய்ப்புகளை நழுவவிடாமல் நடித்து வருகிறேன். தற்போது சற்குணம் இயக்கத்தில் ஒரு வெப்சீரியல், விமல், தனுஷ் ஆகியோரின் பெயரிடப்படாத படங்களிலும் நடித்து வருகிறேன்.
அரசியல் ஆசை இல்லை. கலை சேவையுடன் மக்கள் சேவை செய்வதே எனது லட்சியம் என்றார்.