Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

'கால்கே'வை படைத்தவன் நான்! கனவுலக கலைஞன் மதன் கார்க்கி!

28 ஜூன், 2015 - 09:18 IST
எழுத்தின் அளவு:
I-made-tha-Kalkey-says-Madhankarky

'குவியம் இல்லா காட்சிப் பேழை, ஒசக்க ஒசக்க, அஸ்கா லஸ்கா, ஐலா ஐலா' - இப்படி, புதுப்புது வார்த்தைகளை, தன் பாடல் வரிகளில் வார்த்தெடுப்பதில் வல்லவர், மதன் கார்க்கி! இப்படி சினிமாவில் பல சொற்களை பயன்படுத்தினாலும், தனிப்பட்ட முறையில், தமிழுக்கு சில தொண்டுகள் செய்யும் முயற்சியில் இருக்கிறார், இந்த 'மாடர்ன்' பாடலாசிரியர்! 'கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன்' என்பது, காலம் இவருக்கு தந்த அடையாளம். 'கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம், மெல்லினம் கல்வி நிறுவனம்' இரண்டும், தனக்கென்று இவர் உருவாக்கிக் கொண்ட கவுரவம்.


தற்போது, தமிழ், தெலுங்கு என, இருமொழிகளில் தயாராகியிருக்கும், 'பாகுபலி' படத்திற்கு வசனம் எழுதிய உற்சாகத்திலும், பாரதிராஜாவின் 'ஓம்' படத்துக்கு வசனம் எழுதும் முனைப்பிலும் இருந்தவர், நம்மிடம் இனிமையாக பேசத் துவங்கினார்!


* ஒரு பிரம்மாண்ட கதைக்கு, வசனம் எழுதிய அனுபவம்?


'நான் ஈ' படத்துக்கு, 'வீசும் வெளிச்சத்திலே...' பாட்டு எழுதின சமயம், ராஜமவுலி சார், 'வசனம் எழுதுவீங்களா?'ன்னு கேட்டார். 'எழுதுவேன்'னு சொல்லி வைச்சேன்! அந்த நொடியில உருவான வாய்ப்பு இது! ஆரம்பத்துல, இந்த படத்துக்கான வசனம், எந்த மொழி நடையில இருக்கணும்னு, நிறைய குழப்பம் இருந்தது! அப்புறமா, நாலுவிதமான மொழி நடைகளை உருவாக்கி, அதுல இருந்து எளிமையான ஒரு மொழி நடையை தேர்ந்தெடுத்தோம்!


* சரி... 'பாகுபலி'யின் தமிழ் பற்றி...?


முதல்ல, நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக்க விரும்புகிறேன். 'பாகுபலி,' தெலுங்குல இருந்து தமிழ்ல 'டப்' பண்ற படம் கிடையாது. காரணம், இந்த படத்தோட முக்கால்வாசி வசனங்களை தமிழ்ல எழுதிட்டு, அதுக்கப்புறம் தான் தெலுங்குல மொழிபெயர்ப்பு பண்ணினோம். இந்த வகையில, இது முழுக்க முழுக்க தமிழ் படம்! அப்புறம், இதுல 'காலகேயர்கள்'ங்கற ஒரு பழங்குடியின சமூகம் வர்ற மாதிரி சில காட்சிகள் இருக்கு! அந்த மக்களுக்குன்னே, 'கால்கே'னு ஒரு புதுமொழியை உருவாக்கியிருக்கேன்! ஆப்ரிக்காவோட தொன்மையான மொழியான, 'க்ளிக்' தான், என் 'கால்கே'வுக்கு தாய்!


* அது என்ன, 'லிரிக் இன்ஜினியரிங்?'


'லிரிக் இன்ஜினியரிங்னா, கம்ப்யூட்டரே பாடல் வரிகளை அமைச்சிடும்'னு, பலர் தவறா புரிஞ்சுக்கிறாங்க. அது, அப்படியில்ல! நான் பாடல் எழுத ஆரம்பிச்சப்போ, எனக்கு பலவிதமான வர்ணனை வார்த்தைகள் தேவைப்பட்டது! அப்போ, எனக்கான ஒரு வழிகாட்டியா நான் தேர்ந்தெடுத்தது தான், 'லிரிக் இன்ஜினியரிங்!' ஒரு கணக்கருக்கு எப்படி கால்குலேட்டரோ, அப்படி தான் எனக்கு இது! வார்த்தைகளை, 'சட்'ன்னு எடுத்துக் கொடுக்கிற ஒரு தளம்!


* கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் தற்போதைய பணி?


தொழில்நுட்பங்களை அதிகமாக பயன்படுத்துற தலைமுறை தான், இப்போ தமிழை விட்டு விலகி இருக்காங்க! அவங்களை மறுபடியும் தமிழுக்கு கொண்டு வர்ற முயற்சியா, தமிழ்ல குறுஞ்செயலிகள் வடிவமைக்கிறோம்! இப்போவரைக்கும், குறள், அகராதின்னு இரண்டு குறுஞ்செயலிகள் வெளியிட்டிருக்கோம்! 'ஆப்பிள் வாட்ச்'சோட, முதல் தமிழ் செயலி, எங்கள், 'குறள்' தான்!


* உங்களின் விருப்பத்திற்குரிய புத்தகங்கள்?


நான் புத்தகங்களை அதிகமா வாசிக்கிறதில்லை! அப்பாவோட புத்தகங்களை மட்டும் அப்பப்போ வாசிப்பேன். அதுல ரொம்ப பிடிச்சதுன்னு சொல்லணும்னா... கருவாச்சி காவியம்.


* 'டக்'கென்று, நான்கு காதல் வரிகள் சொல்லுங்களேன்?


அப்படியெல்லாம், 'டக்'குனு வெறும் நாலு வரியில காதலை சொல்லிட்டா, என்னை மாதிரியான பாடலாசிரியர்களுக்கு வேலையே இல்லாம போயிடும்,! சிரித்தபடியே விடைபெறுகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in