69வது படம் : வினோத்திற்கு விஜய் போட்ட உத்தரவு | அஜித், கமல் வழியைப் பின்பற்றுவார்களா ரஜினி, விஜய்? | கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன்: அஜித் உடன் இணைவது குறித்து விஷ்ணுவர்தன் தகவல் | நவ., 22ல் ரிலீஸாகும் மிருணாள் குல்கர்னியின் ‛தாய் ஆகர்' | முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நடிகை கஸ்தூரி | பாலகிருஷ்ணாவிடம் சூர்யாவை மாட்டி விட்ட கார்த்தி | குபேரா படம் பற்றி ராஷ்மிகா வெளியிட்ட அப்டேட் | 2024 - தீபாவளி படங்கள் கற்றுத் தந்த பாடம் என்ன? | 'புஷ்பா 2' பதிவுகளை புறக்கணிக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் | விடை பெற்றார் நடிகர் டெல்லி கணேஷ் ; வான் படை சார்பில் அஞ்சலி : உடல் தகனம் |
மின்மினி பூச்சிகளாய், இளம் வயதிலே காமெரா வெளிச்சம் பட்டு பழகிய நடிகைகள், புகழின் உச்சம் தொட்டு வந்த நடிகைகள், வண்ணம் பூசி, ரசிகர்களை தூங்க விடாமல் துரத்திய நடிகைகள், இரவு பகலாய் சக்ரமாய் உழைத்து, சற்றே இளைப்பாற நினைத்த போது, எதிரில் நிற்கும் பிம்பத்தில் கிடைத்த அன்பில் ஆதரவில், அனுசரனையில் மொத்த வாழ்க்கையும் முடிவுக்கு கொண்டு வரும், சில நடிகைகளின் வாழ்க்கை ஏனோ, விரைவில் வண்ணம் இழந்து, வாடிப் போகிறது. கட்டுகட்டாய் சம்பாதித்து, கட்டுடலை பேணிக் காத்து, காதலின் ஊடலில் கல்யாணம், பிறகு குடும்பம், குழந்தை என்று வெளிச்சத்திற்கு பின்னால் வாழத் தொடங்கிய நடிகைகளின் வாழ்க்கையில், நேசித்தவர்களின் நிஜமான அன்பில் இனம் புரியாத விரிசல் விழுகிறது. உறவை இழந்து , ஊரை இழந்து நிற்கும் நடிகைகளின் எதிர்காலம்? மீண்டும் காமெரா வெளிச்சமே, அவர்களுக்கு கை கொடுத்து தூக்கி விடுகிறது.
சமீபத்தில் அப்படி ஒரு சிக்கலில் சிக்கி தவிக்கும் நடிகை ஷார்மிளா, ஒரு நிருபராய் பார்க்காமல், தோழமையோடு தோள் கொடுக்கும் தோழியாய் அவர் கதைகளை நம்மிடம் பகிர்ந்து கொண்ட பதிவினை அப்படியே எழுதுகிறோம். நாளை இவரைப் போல் வேறு ஒருவருக்கும் அப்படி ஒரு நிலை வந்திடக்கூடாது என்ற ஆதங்கத்தோடு....
* உங்க பேர் வெளில தெரிஞ்ச படம் எந்த படம்?
நான் பிரசாந்த் கூட கிழக்கே வரும் பாட்டு படத்தில் தான் முதன் முதலில் நடிக்க ஆரம்பிச்சேன். ஆனால் முதலில் நான் நடித்து வெளிவந்த படம், ஒயிலாட்டம். ஆர்.சுந்தர்ராஜன் சார் எனக்கு பட போஸ்டரிலே ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தார். படம் வந்த பிறகு ஒயிலாட்டம் ஷார்மிளா அப்படினு தான் எல்லாரும் கூப்பிட்டாங்க. அந்தளவு ரீச் ஆகியிருந்தேன் தமிழ் ரசிகர்களிடம்.
* தமிழ்ல நடிக்கும் போது வேற மொழி படங்களில் நடிச்சிங்களா?
தமிழ்ல 12 படங்களில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். ஆனா, தமிழ விட மலையாளத்தில் 38 படங்களில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். மம்மூட்டி, ஜெயராம், மோகன்லால் இப்படி எல்லா பெரிய ஆர்ட்டிஸ்ட் கூடவும் நடிச்சிருக்கேன். ரொம்ப பிஸினா அப்போ மலையாளத்தில தான். (தனம், கேலி) இப்படி சில படங்கள் சூப்பர் ஹிட் ஆகியிருக்கு.
* உங்க சினிமா பிரண்ட்ஸ் யார்?
மோகினி, செண்பா, யுவராணி, கஸ்தூரி இவர்கள் எல்லாரும். ஆனா இப்போ என் வயது பிரண்ட்ஸ் எனக்கு யாரும் இல்லை. எதும் ஷேர் பண்ணிக்கிற மாதிரி யாரும் இல்லை. என் பிரண்ட்ஸ் நிறைய பேர் யூ.எஸ்.,ல செட்டில் ஆகிட்டாங்க. அவங்களுக்கு பெரிய பசங்க இருப்பாங்கனு நினைக்கிறேன்.
* கேட்க கூடாத கேள்வி தான் இது, ஆனா சொல்லுங்க நடிகைகளின் வாழ்க்கை மட்டும் ஏன் சரியா அமையறது இல்லை?
நடிகைகள் பொறுத்த வரை என்ன செய்தாலும் வெளில தெரிஞ்சிடும்.எனக்கு தெரிஞ்சவரை ஈகோ ஒரு பெரிய காரணம், அப்புறம் ஒரு நடிகையாவே, குடும்பத்துக்குள்ள வாழறது தான். வெளில இருந்து பார்க்கும் போது, நல்லா தானே இருக்காங்கனு சொல்வாங்க. ஆனா, பர்சனல் வாழ்க்கையில் பார்த்தால் ஆயிரம் வலி. சொல்ல முடியாத அவஸ்தைகள் இருக்கும். குடும்பத்துக்குள் நடப்பது எல்லாம் கொஞ்சம் புதுசா இருக்கும். அதுக்குள்ள அட்ஜஸ்ட் ஆறதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். இதான் பிரச்னையே. பிரச்சனை எல்லார் வீட்லயும் இருக்கு. ஆனா நடிகைகள் பிரச்சனைனா வெளியே தெரிஞ்சுடுது.
* இப்போ நீங்க தனியா தான் இருக்கீங்களா?
அம்மா, நான், பையன் இருக்கோம். டைவர்ஸ் அப்ளே பண்ணிருக்கோம். போயிட்டிருக்கு. இதற்கிடையில் எனக்கு 5 வயதில் அடானஸ் என்ற மகன் இருக்கான். அவன் பிடிவாதமா இருக்கான், அப்பா கூட இருக்கனும்னு. அதனால், இப்போ 2 பேர் குடும்பத்திலும் கொஞ்ச நாள் மாற்றி மாற்றி பார்த்துக்கிறோம் அவனை.
* வாழ்க்கையில் நீங்க புரிந்து கொண்டது என்ன?
கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வர்றவங்க பின்னாளில் வசதியா இருக்காங்க. அவங்களுக்கு பணத்தின் மதிப்பு தெரியுது. ஏதோ சேர்த்து வைக்கிறாங்க, செட்டில் ஆயிடுறாங்க. ஆனால் நான், அப்படி இல்லை. அப்பா ஸ்டேட் பேங்கில் பெரிய ஆபிஸர். தங்கை பெரிய ஹோட்டலில் வேலை பார்த்தார். நான் நடிகையா இருந்ததால் பண புழக்கம் அதிகம். எதுக்கும் கவலைப் படுறதில்லை. நான் பணத்துக்குனு சினிமாக்கு வரல. பாப்புலாரிட்டிக்காக மட்டுமே வந்தேன். எதுக்கெடுத்தாலும் இஷ்டத்துக்கு செலவு பண்றது. என் அப்பா அம்மாவும் எவ்ளோ சம்பளம் வாங்குற, எங்களிடம் கொடுனு கேட்டதில்லை. அவங்க கேட்டு இருக்கனும். எனக்குனு கொஞ்சம் சேர்த்திருப்பேன். எதுமே இல்லாம போச்சு. பிரண்ட்ஸ் கூட ஹோட்டல் போறது, நல்லா சாப்பிடுறது, படம் போறது, ஷாப்பிங் போனா ஒரு டிரஸ் 20,000 சொன்னால் கூட வாங்கிடுவேன். அது மட்டும் இல்ல, என்னோட வர்ற பிரண்ட்சுக்கும் வாங்கி தருவேன். சேர்த்து வைப்பது தவிர எல்லாத்துக்கும் செலவு பண்ணிட்டேன். இப்போ ஒரு ஒரு விஷயத்தை நினைத்தும் பீல் பண்றேன்.
* இப்போ உங்க வருமானம் ?
கணவர் நோக்கியா கம்பெனில இன்ஜினியர். இப்போ கம்பெனி மூடியதால் வேறு வேலை தேடிட்டு இருக்கார். நானும் கேக்க முடியாத சூழ்நிலை. இப்போ 13 படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டா நடிக்கிறேன். யாதுமாகி படம் மூலம் ரீ என்ட்ரி ஆனேன். புழல், மகான் கணக்கு, கோட்டி, இவன் வேற மாதிரி, விலாசம் போன்ற படங்களில் நடிச்சேன். இப்பவும் பல படங்களில் பிசியா போய்ட்டிருக்கு. பல நிகழ்ச்சிகளில் காம்பையர் பண்றேன். ஆலப்பாக்கத்தில் (சென்னை) வீடு, ஏதோ வர்றதுக்கு தகுந்த மாதிரி குடும்பம் நடத்துறேன். (ஏதேனும் நல்ல படமாக இருந்தால் கேரக்டர் ரோல் இருந்தால் சொல்லுங்கள் என்று நம்மிடம் கேட்கிறார்).
* ஒரு நடிகைனா உடல் பராமரிப்பு உட்பட பல செலவுகளும் சமாளிக்கனும். கேரக்டர் ஆர்டிஸ்ட்னா அந்த அளவு சம்பளம் கிடைக்குமா?
இப்ப தான் பழைய வாழ்க்கையின் வலி என்னனு புரியுது. இப்போ உணர்றேன். அம்மாவா ஒரு பையன வளர்க்கனும். அவனுக்கு கொஞ்சம் சேர்க்கனும். இப்ப தான் இது எனக்கு புரிஞ்சிருக்கு. அப்ப அப்படி இல்லை. டாடி இந்த டிரஸ் ஜஸ்ட் ரூ.16,000 தான், இதை எடுத்துக்குறேனு சொன்னாலும் ஓகே. நோ ப்ராப்பளம்னு சொல்லுவார். இப்படி பழக்கப்பட்டவ இப்ப ஒரு ஒரு விஷயமும் யோசிச்சி செய்றேன். வர்ற சம்பளம் எவ்ளோ கிடைத்தாலும் கொஞ்சம் எடுத்து வச்சிட்டு, மற்றத செலவு செய்றேன். பார்லர் கூட போகமாட்டேன். முல்தானி மட்டி, பயிறு மாவு இலைகளை தான், வீட்டில் நானே பூசிக்கிறேன். அந்த அளவு மாறிப் போயிருக்கேன்.
* எதிர்காலம்?
ஒரு நடிகையா எல்லாம் வாழ முடியாது. வீட்டில் குடும்ப பெண்ணா தான் இருக்கனும். நிறைய குத்துப் பாட்டுக்கு வாய்ப்பு வருது. ஆனா எனக்கு அந்த வகையில் விருப்பம் இல்லை. எனக்கு ரொம்ப ஈகோ இருந்தது. இப்போ கொஞ்சம் வெளில வந்திருக்கேன். பையன் சாதாரண ஸ்கூலில் பஸ்ட் ஸ்டாண்டர்டு படிக்கிறான். சூட்டிங் இல்லாத நாளில் நான் தான் கூப்பிட்டு போறேன். அவனை பார்த்துக்கிறேன். பையனுக்கு 2 பேரும் இப்போ தேவைனு உணர்றேன்.
* இந்த வயசிலே விவாகரத்து வாங்கிட்டு தனியா வாழறது சாத்தியமா? 2வது திருமணம் ஏதும் செய்துக்குவிங்களா?
இப்போ வரை எனக்கு அந்த ஐடியா இல்லை. காரணம் வர்றவர் என்னை நல்லா பார்த்துப்பார். இந்த சின்ன குழந்தைக்கு எப்படி கேர் எடுப்பார்னு தோணுது. எனக்கு இப்போ பைபிள் உறுதுணையா இருக்கு. பெரியம்மா, மாமா வீடு இப்படி உறவினர்களோடு உறவை வளர்த்துக்கிறேன். மற்றபடி மறுமணம் எனக்கே ஒரு கேள்விக்குறி தான்.
ஆயிரம் ஆயிரம் கனவு கற்பனையோடு, கனவு தொழிற்சாலைக்கு காலடி வைக்கும் இளவயது நடிகைகள் ஏதோ ஒரு வித சூழலினால், இழப்புகள் அதிகமாகி, வாழ்வில் தவித்து நிற்கின்றனர். ஷார்மிளாவைப் போல் இன்னும் பலர் இருக்கலாம். ஆனால் ஒரு விஷயம், வரவுக்கு ஏற்ப செலவு செய்வதும், சேர்த்து வைப்பதும், வருங்கால வாழ்க்கைக்கு நல்லது என்பது இனியாவது புரியட்டும்.
இது ஒரு பாவப்பட்ட கதை என்பதை விட ஒரு படிப்பினைக்கான கதை...