ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

தெலுங்கில் 10 க்கும் அதிகமான படங்களில் ஹீரோவாக நடித்தவர் த்ரிகுண். தமிழில் தங்கமகன், டெவில், கடாவர் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த முழுக்க முழுக்க காமெடி கலந்த காதல் கதை படமான "ஸ்வீட்டி நாட்டி கிரேசி", பிப்ரவரி 13ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. கோவை ரமேஷ் தயாரிக்க, பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ராஜசேகர்.ஜி இயக்கியுள்ளார். ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா ஆகிய மூவரும் ஹீரோயின்கள். ரவி மரியா, தம்பி ராமைய்யா, சத்யன், சாம்ஸ், பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, ரகு பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல பான் இந்திய பெண் ஒளிப்பதிவாளர் விஜய ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். கோலி சோடா, கடுகு, சண்டிவீரன் போன்ற வெற்றி படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இசையமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ‛‛மூன்று வெவ்வேறு விதமான காதலை மையமாக வைத்து மூன்று கோணங்களில் நடக்கும் முழுக்க முழுக்க காமெடி கலாட்டாதான் இந்த படம். இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏற்ற டிரெண்டிங்கான படமாக இருக்கும். படம் பார்க்க வரும் அனைவரும் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரித்து மகிழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தினோம். சென்னை, ஐதராபாத், கோவை, கோத்தகிரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது'' என்கிறார்.