''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஆறு மாத குழந்தையாக தமிழ் திரை உலகில் உதித்து, சத்தமே இல்லாமல் 30 ஆண்டுகளாக நடித்து சாதித்துக்கொண்டிருக்கும் நடிகையை தெரியுமா? இவர் சென்னையை சேர்ந்த நடிகை தனலட்சுமி. எழுபதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள தனலட்சுமி மனம் திறந்ததாவது:
நான் 6 மாத குழந்தையாக இருக்கும் போதே நடிக்க துவங்கியவள். அப்போது 'வால்டர் வெற்றிவேல்' படத்தில் சத்தியராஜ்-சுகன்யாவுக்கு மகளாக நடிக்க குழந்தை தேவைபட்டது. என் உறவினர் மூலமாக எனக்கு அந்த கதாபாத்திரம் கிடைத்தது.
அதன்பின் வால்டர் வெற்றிவேல், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, இன்பா, ஜாம்பவான், சத்திரபதி, பிரியமுடன் உள்ளிட்ட 15க்கும் மேலான படங்களில் பெரிய நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக 'மங்கை' சீரியலில் அறிமுகமானேன். அப்போது இருந்தே சீரியலில் நடித்து கொண்டிருக்கிறேன்.
என் அப்பா, அம்மா சினிமா துறையில் பயணிக்க எனக்கு ஊக்கமளித்தனர். நடித்து கொண்டே கல்லுாரியில் எம்.எஸ்சி., படித்தேன். 'பூவே பூச்சூடவா' சீரியலில் ஹீரோயினாகவும், 'யாரடி நீ மோகினி' சீரியலில் வில்லியாகவும், 30 வருடங்களில் 70க்கும் அதிகமான சீரியல்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பு பயணத்தை தொடர்கிறேன். 2020ல் எனக்கு திருமணம் ஆனது. கணவர் சிவா, தொழிலதிபர். அவர் எனக்கு நண்பராக இருப்பதால் என் நடிப்பு உலகத்திற்கு இன்னும் உற்சாகம் கிடைத்தது. எத்தனையோ இன்னல்களை சந்தித்துள்ளேன். எதற்கும் பின்வாங்காமல் திறமையை முன்வைத்து நல்ல மனிதர்கள் ஒத்துழைப்போடு பயணிக்கிறேன்.
திரைப்படங்களில் வாய்ப்புகள் வருகிறது. திரைப்படங்களை பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எடுத்து முடித்து விடுவார்கள் என்பதால் அதில் நடிக்க பெரிதும் எனக்கு விருப்பம் இல்லை. சீரியல்கள் அப்படியல்ல; ஆண்டுக்கணக்கில் நீடித்து கொண்டே இருப்பதால் இது எனக்கு பிடித்திருக்கிறது.
நமக்கு எந்த துறை பிடித்திருக்கிறதோ அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு யார் சொல்வதையும் காதில் வாங்காமல் நம் வேலையை சரியாக செய்தால் கட்டாயம் வெற்றி கிடைக்கும். இதை நான் இப்போதும் பின்பற்றுகிறேன். அதனால் மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் நடிப்பை தொடர்கிறேன் என்றார்.