'தேவரா' டிரைலர்: பான் இந்தியாக்கு 'செட்' ஆகுமா? | சின்னத்திரையில் இனி நடிக்கமாட்டேன்! பிரியங்கா அதிரடி | 13 வருட காதல்! காதலியை கரம்பிடித்த அவினாஷ் | ஹிந்திக்கு செல்லும் வேட்டையன் இயக்குனர் ஞானவேல் : என்ன கதை தெரியுமா? | ஆந்திரா, தெலங்கானா வெள்ளத்திற்கு சிம்பு நிதியுதவி | மலையாளத்திலிருந்து இறக்குமதியான 'மனசிலாயோ, தாவூதி' பாடல்கள்... - அனிருத் சம்பவம் | இறுதிக் கட்டத்தை நெருங்கிய தக் லைப் | நஷ்டத்தை சரி செய்ய ரவி தேஜா எடுத்த அதிரடி முடிவு | செப்.,21ல் வெளியாகும் ‛பிரதர்' பட இசை, டீசர் வெளியீட்டு விழா | விஜய் படத்தை தொடர்ந்து சூர்யா படத்திலும் பிரசாந்த்? |
இயக்குனர், கதையாசிரியர், வசனகர்த்தா, குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர், பட்டிமன்ற பேச்சாளர், டிவி தொகுப்பாளர் என பல பரிமாணங்களில் பேசப்படுவர் ரமேஷ்கண்ணா.
கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், அம்பி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கொண்டே ஓய்வு நேரங்களில் பட்டிமன்றங்களில் பங்கேற்று வருகிறார். அவருடன் பேசியதிலிருந்து...
நாற்பதாண்டுகளாக சினிமாத்துறையில் இருப்பதை பெருமையாக கருதுகிறேன். இயக்குனராகும் ஆசையில் 1983 காலகட்டத்தில் இத்துறைக்கு வந்தேன். இயக்குனர்கள் ராமநாராயணன், விக்ரமன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன்.
இயக்குனர் விக்ரமன் என்னிடமிருந்த நடிப்பு, நகைச்சுவை திறமையை கண்டறிந்து 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகப்படுத்தினார். பிறகு உன்னை நினைத்து, பிரண்ட்ஸ், படையப்பா, வில்லன், வரலாறு என பல படங்களில் நடித்தேன்.
அஜித் நடித்த 'தொடரும்' படத்தை இயக்கிய அனுபவத்தை மறக்க முடியாதது. என் கதையில் தயாரான 'ஆதவன்' படமும் வெற்றி பெற்றது. நான் நகைச்சுவை நடிகராக நடித்த படங்கள் அன்றைய காலகட்டத்தில் வெள்ளிவிழா கொண்டாடின. இதனால் வெள்ளிவிழா நகைச்சுவை நாயகர் என என்னை நண்பர்கள் அழைப்பர்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை படங்களில் நகைச்சுவை, சென்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால் இன்று பிரமாண்டம் என்ற பெயரில் வெட்டு, குத்து, துப்பாக்கிச்சூடு என ஆக் ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. படங்களுக்கான பட்ஜெட் பல கோடி ரூபாய்க்கு சென்று விட்டது. இதனால் படங்களை இயக்குவது என்னை யோசிக்க வைத்து விட்டது.
படையப்பா, வில்லன் போன்ற படங்களில் நடித்த காலத்திலேயே ஹீரோ வாய்ப்பும் வந்தது. ஆனால் ஹீரோ என்பது பெரிய விஷயம். முழு படத்துக்கும் அவரே தான் பொறுப்பு. ஹீரோன்னா சும்மாவா... ஆனால் இன்று யோகிபாபு, சூரி உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் நன்றாக நடித்து கொண்டுள்ளனர். குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அவர்கள் நாயகர்களாவதால் படங்களில் காமெடி குறைவாகவே உள்ளது.
படப்பிடிப்புகளுக்கு மத்தியில் ஓய்வு நேரத்தில் மக்களை மகிழ்விக்க நகைச்சுவை பட்டிமன்றங்களில் நடுவராக, அணி தலைவராக பங்கேற்கிறேன். பட்டிமன்றங்களில் அறிவுக்கு கொஞ்சம் வேலை கொடுக்க வேண்டும். மக்களின் பாராட்டு, மகிழ்ச்சியை நேரில் பெற்று விடலாம்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம், என் மகன் ஜஸ்வந்த்கண்ணன் உதவி இயக்குனராக உள்ளார். சர்கார் உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். மற்றொரு மகன் பிரதீஷ்திவாகரனும் உதவி இயக்குனராக உள்ளார்.
சினிமாவோ, பட்டிமன்றமோ மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது தான் ஆசை. இவ்வாறு கூறினார்.