2025 பொங்கல் போட்டியில் என்னென்ன படங்கள் ? | பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா | சங்கராந்தி தினத்தில் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' | இட்லி கடை படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக்கான வீடியோ | ராம்கோபால் வர்மா - பஹத் பாசில் சந்திப்பு : பின்னணி என்ன ? | கேரள மலைப்பகுதிகளில் கேஷுவலாக ஜாக்கிங் போகும் விஜய் தேவரகொண்டா | 4 மணிநேர காத்திருப்பு : ஸ்ருதிஹாசனை அவதிக்குள்ளாக்கிய விமான நிறுவனம் | புதிய பிரபஞ்சம் உருவானாலும் அங்கேயும் ரஜினி ஒருவர்தான் : ரித்திகா சிங் பிரமிப்பு | மாமனார் அமிதாப்புக்கு தாமதமாக வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா ராய் | எனக்கு தொழில் ரொமான்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புன்னகையில் பூத்த பூவிதழ், கண்களின் இரு விழியாலும், கன்னத்தில் விழும் சிறு குழியாலும் அழகிற்கே கூடுதல் அழகு சேர்க்கும் பதுமை. 'ரசவாதி' திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை வென்ற ரேஷ்மா வெங்கடேஷ் நம்முடன் பகிர்ந்தது.
சொந்த ஊர் கேரளா மாநிலம். வளர்ந்தது படிச்சது ஊட்டி. பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்த செல்ல மகள். ஊட்டி கல்லுாரியில் பி.காம்., முடித்து பணிக்காக சென்னைக்கு வந்து தற்போது சென்னை வாசியாக மாறிவிட்டேன்.
சென்னைக்கு வந்து செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தேன். பின் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணி செய்தேன். அதில் கிடைத்த அனுபவம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற உதவியாக இருந்தது. கிடைத்த வாய்ப்புகளில் முழு திறமையை வெளிப்படுத்தி வருகிறேன்.
'மதுரை பையன், சென்னை பொண்ணு' வெப் சீரிஸில் கதாநாயகியாக நடித்தேன். அந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சினிமாவில் நடிக்க பல முறை தேர்வாகி வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. ஆனால் தொடர் முயற்சி செய்து தற்போது திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறேன்.
'ரசவாதி' படத்தின் மூலம் அர்ஜீன் தாஸ், சுஜித் சங்கர் ஆகிய நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர். இவர்களுடன் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. சுஜித்துடன் நடித்த போது சற்று அச்சத்துடன் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் இயக்குனர் சாந்த குமார் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றியது எனக்கு மகிழ்ச்சி.
எனக்கு பரதநாட்டியம் தெரியாது. ஆனால் படத்தில் வரும் பாடலில் பரதநாட்டியம் இருந்தது. அதற்காக படத்தின் பாடலையே போட்டு பயிற்சி எடுத்து போது அது தான் பாடல் என்பது எனக்கு தெரியாது. பாடல்வரிகள் இல்லாமல் கதாபாத்திரம், காதலர்கள் குறித்து 'தாய் தாய்'பாடல் எளிதாக எடுத்துரைக்கிறது.
சாலா, சுடரி உட்பட மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். ரசவாதி எனது நான்காவது படம். ஆனால் 'ரசவாதி' முதலில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆக. 23ல் 'சாலா' திரைப்படம் வெளியாகிறது. இந்த ஆண்டிலேயே நான்கு திரைப்படங்களும் வெளிவரும்.
ரசவாதி படத்திற்கு பின்பு உடல் எடையில் 10 கிலோ குறைத்துள்ளேன். நடைப்பயிற்சி, உணவு கட்டுபாட்டை கடைபிடித்து வருகிறேன்.
'மவுன ராகம்' போன்ற காதல் கதையில் கதாநாயகியாக நடிக்க வேண்டும். தற்போது வரை கதையை கேட்டு அழுத்தமான கதாபாத்திரம் இருப்பதை உறுதி செய்த பின்னரே நடித்து வருகிறேன்.
பெற்றோரின் ஆதரவோடு முழு திறமையை வெளிப்படுத்தினால் சினிமா மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்கள் வெல்ல முடியும்.