ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
இந்த படம் அந்த படம் இல்லை எந்த படத்தில் களமிறங்கினாலும் ஆக் ஷன் தான்... சும்மா தெறிக்க விட்டு, பல நுாறு பேரை பறக்க விடுவாரு; நானும் மதுரைக்காரன் தான்டா என இவர் பேசிய வசனம் இன்னும் செம மாஸ் லிஸ்டில் தான் இருக்கிறது என ரசிகர்கள் புகழும் ஆறடி உயர புயல் நடிகர் விஷால் மனம் திறக்கிறார்...
'லத்தி' படத்துக்கு மட்டும் ஓவர் புரமோஷன் ஏன்?
முதல் முறை கான்ஸ்டபிளாக நடிச்சிருக்கேன். புதுமுக இயக்குனர் வினோத், 7 வயசு பையனுக்கு அப்பாவாக நடிக்க வைச்சிருக்காரு. போலீஸ் கான்ஸ்டபிள் கஷ்டங்களை கூறும் கதை தான் 'லத்தி' படம். லேடி கான்ஸ்டபிளுக்கு மொபைல் டாய்லெட், அரசு பள்ளிகளில் நல்ல டாய்லெட் அவசியம் என்பதை அரசிற்கு கோரிக்கையாக வைக்கிறேன்.
படப்பிடிப்பு தளம் எப்படி இருக்கும் சொல்லுங்க...
85 நாள் ஒரே கட்டடத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். 450 பேர் இருப்பார்கள். ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹைன் உடன் முதல் முறையா வேலை பார்த்தேன். 4 வது மாடியில் இருந்து குதித்தேன், ரத்தம் சிந்தி சிகிச்சை பெற்று நடித்தேன்.
'லத்தி'யில் சுனைனாவை தேர்ந்தெடுத்த காரணம்...
ஒரு சிம்பிளான பொண்ணு படத்தில் தேவைபட்டது. 2012 'சமர்' ல எனக்கு ஜோடியாக நடிச்சாங்க. எனக்கு நல்ல தோழி என்பதால் கணவன், மனைவி கெமிஸ்ட்ரி நல்லா இருக்கும்னு தான் தேர்ந்தெடுத்தோம். சுனைனா நடிப்பில் நிறைய மாற்றம் தெரியும்.
நண்பர்களை தயாரிப்பாளராக மாற்றியது குறித்து...
இயக்குனர் வந்து கதை சொல்லும் போதே நந்தா, ரமணாவை தயாரிப்பாளராக ஆக்கினேன். ரெண்டு பேரும் படத்துக்கு தேவையானதை நன்றாகவே செய்து கொடுத்தாங்க. நான் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினேன்
யுவன் மியூசிக் எந்த அளவுக்கு உதவியா இருந்தது...
படத்தை 'மியூட்' பண்ணி பார்க்குறதுக்கும் யுவன் மியூசிக் உடன் பார்க்குறதுக்கும் வித்தியாசம் இருக்கும். படம் பார்த்து வெளியே வந்த பிறகு 'பின்னணி இசை பின்னிட்டாரு'னு முதல் பாராட்டு யுவனுக்கு கிடைக்கும்.
விஜய்க்கு வில்லனாக, லோகேஷ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?
'மார்க் அன்டனி' படத்திற்கு பின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படம் பண்றேன். 'துப்பறிவாளன் 2' வேற இருக்கு. படம் இயக்கி நடிப்பது சவால். பிறகு விஜய்க்கு கதை ரெடி பண்றேன். ஒரு படத்தில் நடிக்க முழுமையா இறங்கணும். அந்த சூழல் இப்போது அமையல. அதனால் நோ சொல்லிட்டேன்.
அமைச்சரான உதயநிதியிடம் உங்கள் வேண்டுகோள்...
சென்னையில் பிலிம் சிட்டி இல்லாதது கஷ்டமாக இருக்கு. தரமணி இடத்தை சரியா பராமரித்தால் திரை துறைக்கு உதவியா இருக்கும். சிறிய படங்களுக்கு வெளியூர் போகும் அவசியம் இருக்காது.
எதிர்காலத்தில் தமிழக அரசியலில் விஷால்...
இப்போது எனக்கு நல்ல படங்கள் இருக்கு. அரசியலுக்கு வரலாம், வராமலும் போகலாம். பார்க்கலாம்.
நடிகர் சங்க கட்டட நிலவரம் தான் என்ன?
இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவு ஒரு கட்டடமாக சீக்கிரம் வரும். அடுத்த ஆண்டு கட்டடம் முடியும். யாராவது சென்னைக்கு வந்தால் நடிகர் சங்க கட்டடத்தையும் பார்க்கணும்ங்கற அளவுக்கு சினிமா சின்னமாக கொண்டு வருவோம்.
2023 புத்தாண்டு திட்டங்கள் என்ன?
அடுத்தடுத்து படங்கள் நடிக்க வேண்டும். நிறைய மெனக்கெடல், உழைப்பு வேண்டி இருக்கு.