மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ஆட்டம்... ஆட்டம்... ஆட்டம்... இது சிலம்பரசனின் சிலம்பாட்டம் என அதிவேக நடனம், நடிப்பு, காதல், சோகம் என திரையை திருவிழாவாக்கும் தமிழ் சினிமாவின் ஒரே ஹீரோ என ரசிகர்கள் பலர் கொண்டாடும் சிம்பு திரைப் பயணம், மாநாடு படம் குறித்து மனம் திறக்கிறார்...
இன்றைய சினிமா உலகம் எப்படி இருக்கிறது
நிறைய மாறியிருக்கு; புதுசா ஏதாவது கொடுத்தாகனும். இது மக்களுக்கு புரியாதுனு முடிவு பண்ண முடியாது. சினிமா மாற்றத்துக்கு ஏற்ப நாம் மாற வேண்டும். இன்டர்நெட் வரும்போது யாருக்கும் புரியலை. இன்று இன்டர்நெட் இல்லாமல் எதுவும் இல்லை.
சிம்புவின் மாநாடு கதை பற்றி ஒன்லைன்
மக்களுக்கு எளிதாக புரியும், டைம் லுாப் கதை கொண்ட ஒரு கமர்சியல் படம் மாநாடு. சாதாரண பையனா வரும் ஹீரோவுக்கு தன்னை சுற்றி நடப்பது புரியாது. ஒரு மாநாட்டில் சில பிரச்னை நடக்குது. ஹீரோ வில்லனை சுத்த விடுகிறார் என கதை நகர்கிறது.
உங்களுக்குள் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றம்
முன்னாடி எதுக்கும் கவலைப்படாமல் ஜாலியா இருப்பேன். இன்று ஒரு விஷயம் கிடைச்சா அதில் இருந்து 150 விஷயம் எடுக்குறாங்க, அதனால் அமைதியா இருக்க முடிவு பண்ணிருக்கேன். சினிமா தாண்டி எந்த வேலையும் பார்க்குறதில்லை. அலைபேசியை கூட சமீப காலமாக பார்க்குறது இல்லை. இந்த வாழ்க்கை கொஞ்ச நாள் வாழனும்.
எத்தனை கிலோ உடல் எடை குறைத்தீர்கள்
25 கிலோ குறைத்தேன்... இரவில் சாப்பிட்டு உடனடி துாங்கும் போது செரிமானம் ஆகாமல் மறு நாள் காலை வரை வயிற்றில் உணவு சுழற்சி நடக்கும். இரவு சாப்பிடாமல் பசியில் துாங்க வேண்டும். அது கஷ்டம் ஆனால் பயிற்சி எடுத்தால் நல்லது. நடை, உடற்பயிற்சி, டென்னிஸ்க்கு நேரம் ஒதுக்கி செய்தேன்.
இயக்குனர் வெங்கட் பிரபு குழுவுடன் பார்ட்டி
அவங்க பார்ட்டி பண்ணிருப்பாங்க... நான் எங்கும் போகல. இளம் வயதில் பலர், நண்பர்களுடன் ஜாலியா பார்ட்டி போவாங்க. நடிப்பு, கதை, இயக்கம்னு இருந்ததால் எந்த பழக்கமும் இல்லை. இடையில் கொஞ்சம் நடந்தது... எல்லாம் அந்த வயசு வரை தான். இனி பார்ட்டிக்கு இடமில்லை.
அப்பா இயக்கத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு
அப்பா எப்ப கூப்பிட்டாலும் நடிக்க போய்டுவேன். அவர் என் குரு ஆச்சே.
இசை வெளியீட்டு விழாவில் ஏன் அழுதீங்க
பேசும் வரை ஜாலியா இருந்தேன், பேசும் போது உணர்ச்சிவசப்பட்டேன். என் நிறைய படங்களுக்கு பிரச்னை வந்திருக்கு. மாநாடு ரொம்ப எமோஷனல் படம். படம் இடையில் நின்றது. 2 முறை கொரோனா வந்து ரிலீஸ் தள்ளி போனது. இந்த விஷயங்கள் என்னை அழுத்தியதால் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன்.
யுவனுக்கும் உங்களுக்குமான கெமிஸ்ட்ரி
சில நேரம் முழு பாட்டும் முடிச்சு பின் வேண்டாம் முதலில் இருந்து பண்ணலாம்னு சொல்லுவேன். இதுவரை எந்த கேள்வியும் கேட்காமல் ரொம்ப நல்லா வைத்திருக்கிறார். அதனால் தான் எனக்கு வரும் பொண்ணும் அவரைப்போல் இணக்கமாக அமைந்தால் நல்லா இருக்கும்னு கூறினேன்.
உங்க இயக்கத்தில் அடுத்த படம் எப்போது
கொரோனா காலத்தில் நிறைய கதைகள் ரெடி பண்ணிட்டேன். கண்டிப்பா இயக்குவேன். அதெல்லாம் அந்தந்த காலத்திற்கு ஏற்றார் போல் ஒவ்வொன்றாக நடக்கும்.