தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
இனிமையான குரலுக்கு சொந்தக்காரர். கருத்த பெண்னே பாடல் மூலம் டிரெண்ட் ஆகி பல தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர். 24, மாறா உள்ளிட்ட படங்களிலும் பிற மொழி படங்களிலும் பாடி இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட சனா மொய்டுட்டி வாசகர்களுக்காக மனம் திறந்தபோது...
உங்களை பற்றி ...
நான் பிறந்தது கேரளா. வளர்ந்தது மும்பை. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்திருக்கிறேன்.
எப்போது துவங்கியது இந்த இசை பயணம்
அம்மா நன்கு பாடுவார். அதனால் எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. 7 வயதில் மேடையேறி பாடினேன். பின் பள்ளி மேடை, இன்ஜினியரிங் படிக்கும் போது கல்லுாரி மேடை என எனது பயணம் துவங்கியது.
கவர்சாங் ஆர்வம் எப்படி
சிறுவயதில் பாடும் போது அதை ரெக்கார்ட் செய்து கேட்டு பார்ப்பேன். பல மொழிகளிலும் நிறைய பாடல்கள் கேட்பேன். அப்போதுதான் கவர் சாங் எண்ணம் வந்தது. பழைய பாடல்களை புது மெட்டில் பாடி மக்களை முணுமுணுக்க வைக்க எண்ணினேன்.
கருத்த பெண்ணே பாடல் அனுபவம்
1994ல் வெளியான 'தேன்மாவின் கொம்பத்' எனும் மலையாள படத்தின் பாடல் அது. எளிமையான அந்த பாடலை தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப பாப், இந்துஸ்தானி, கிளாசிக் என கலந்து வெளியிட்டேன்.
மறக்க முடியாத அனுபவம்
2011 முதல் கவர் சாங் செய்து வருகிறேன். அதில் பல பாடல்கள் வரவேற்பை பெற்றிருக்கிறது. இருந்தாலும் கருத்த பெண்னே பாடல் டிரெண்டிங்கில் இருந்தது. மலையாள பாடலாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் அந்த பாடலை கொண்டாடினர். இது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
எந்தெந்த மொழிகளில் பாடுகிறீர்கள்
தமிழ், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி, பெங்காலி, பஞ்சாபி மொழிகளில் பாடி வருகிறேன்.
இசைக் குழு மூலம் என்ன செய்து வருகிறீர்கள்
இசை துறையில் இயங்க முடிவெடுத்து இன்ஜினியரிங்க் முடித்த பின் இன்டிபென்டட் மியூசிக் ஆர்ட்டிஸ்ட்டாக எண்ணினேன். அதற்கு குழுவை அமைப்பது கடினமாக இருந்தது. ஆனால் அதில் வென்றேன். இசை குழுவில் அனைவரும் தமிழர்கள். பல மாநிலங்கள், நாடுகளில் மேடை நிகழ்ச்சிகள் செய்திருக்கிறோம். சமீபத்தில் துபாய் சென்று இசை நிகழ்ச்சி நடத்தினோம்.
உங்களது சாதனை என்று கருதுவது
ஏ.ஆர்.,ரஹ்மான் இசையில் பாடியது. அவருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.
எதிர்கால திட்டம்
நிறைய பாடல்கள் பாட வேண்டும். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும்.