ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
'அம்மா பத்தி ஒன்னு சொன்னான் லைப்ல மறக்கமாட்டேன். ஹி ஆஸ்கிங் மீ பார் ஆம்பள! டு ஐ லுக் லைக் ஏ பொம்பள!' என ஆங்கிலமும் தமிழுமாக பேசி 'டாக்டர்' திரைப்பட நகைச்சுவை காட்சிகளில் அப்ளாஸ் வாங்கியவர் பியான் சர்ரோ. இசையமைப்பாளருமான இவர் 'மாஸ்டர்' படத்தின் ஹிட் 'மாஸ்டர் தி ப்ளாஸ்டர்' பாடலை பாடியவர். டிரெண்டிங்கில் கலக்கி வரும் இவர் தினமலர் வாசகர்களுக்காக பேசியது:
சொந்த ஊர் சென்னை ஆலந்துார். 10 வயதில் இசைப் பயணம் துவங்கியது. அக்காவின் கிட்டாரை வைத்து இசையமைக்க பழகினேன். நானே பாடல் எழுதி பாடி இசைப்பேன். கல்லுாரியில் படித்த போது கல்லுாரி பேண்ட்களில் இசை அமைத்தேன். இசையமைப்பாளர் அனிருத்தை அங்கு தான் சந்தித்தேன். கல்சுரல்ஸ், கான்செர்ட்டுகளில் பங்கேற்றேன். டிகிரி முடித்த பின் துபாய் சென்று மியூசிக் படித்தேன்.
சென்னை வந்ததும் பெற்றோர் விருப்பத்தில் வேலைக்கு போனேன். ஆனால் வேலைக்கு சென்ற முதல் நாளின் கால் மணி நேரத்திலேயே இது எனக்கு செட் ஆகாது என்பதை புரிந்து அங்கிருந்து வெளியேறினேன். தொடர்ந்து எம்.பி.ஏ., படித்து கொண்டு இசைக்கான தேடலிலும் ஈடுபட்டேன். நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல' என்ற திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ரோட்டில் நின்று கிட்டார் வாசிக்கும் கலாசாரம் வெளிநாடுகளில் உண்டு. இதை பஸ்கிங் என்பர். இதற்காக அமெரிக்கா சென்று நியூயார்க்கில் இருந்து 6 நகரங்களை கடந்து டெட்ராய்டு நகரம் வரை பஸ்கிங் செய்தேன். 10 மாத பயணத்தில் நிறைய விஷயங்களை கற்று கொண்டேன். மீண்டும் சென்னைக்கு வந்தேன்.
ஜிகர்தண்டா மியூசிக் என சொந்தமாக பேண்ட்ஐ துவங்கினேன். அப்போது தான் அனிருத் மாஸ்டர் படத்திற்கு மாஸ்டர் தி பிளாஸ்டர் பாடல் பாட அழைப்பு விடுத்தார். நாங்கள் நீண்ட கால நண்பர்கள். மூன்று மணி நேரத்திலே அப்பாடலை முடித்தோம். படம் வெளியான பின் அந்த பாடல் இவ்வளவு பிரபலம் ஆகும் என நினைக்கவில்லை. பலரது ரிங் டோனாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் டிஸ்கோ கிளப்களில் கூட இப்பாடல் இசைக்கப்படுகிறது. 'டாக்டர்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எதிர்பாராதது. சின்ன கதாபாத்திரம் தான் என்றாலும் நடித்த விதம் பலருக்கு பிடித்து போனது. டாக்டர் பட இயக்குனர் நெல்சனும் எனது நண்பர் தான். என்னை நடிக்கிறீர்களா என கேட்டார். சும்மா முயற்சி செய்து பாருங்கள் என்றார். நானும் சம்மதித்தேன். கதாபாத்திரத்தின் நகைச்சுவை பலரை சென்றடைந்துள்ளது. சமுக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.
சினிமாவுக்கு முயற்சிப்பவர்களுக்கு நான் கூற விரும்புவது, நீங்கள் நீங்களாக இருப்பது மட்டுமே வெற்றியை தரும். வேறொருவரை பார்த்து அவரை போல் முயற்சி செய்வது இயற்கையாக உங்களுக்குள் விதைக்கப்பட்ட திறமையை வீணடிப்பது போன்றது. அடுத்தடுத்து இசை அமைப்பதற்கும், நடிப்பதற்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. டிசம்பரில் ஒரு பாடலை வெளியிடுகிறேன் என்றார்.